AdmkFailss: "தமிழக
மாணவர்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக 85% இடங்கள், மாநில
பாடதிட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கும்; 15% இடங்கள் சிபிஎஸ்சி
பாடதிட்டம் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கும் வகையிலான அரசானை வெளியிடப்பட்டு
உள்ளது. எனவே இந்த முறையின்படி மாணவர்களுக்கு கலந்தாய்வு 17ம் தேதி
துவங்கும்!" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சட்டசபையில்
அறிவிப்பு.
தமிழ்நாட்டில் சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் வெறும் 1% கூட கிடையாது. ஆனால் அவர்களுக்கு 15% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காரணம் அப்படி ஒதுக்கவில்லையென்றால், நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டுமென்றால் பெரும்பாலான இடங்களை சிபிஎஸ்ஈ மாணவர்களே இடம்பிடிப்பார்கள்! 50% மேற்பட்ட இடங்களை சிபிஎஸ்ஈ மாணவர்கள் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர்களுடைய பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தினால் அவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பதில் ஒன்று அதிசயம் இல்லை!!

மிகப்பெரிய சமூக அநீதியில் இருந்து தப்பிப்பதற்காக ஒப்பீட்டளவில் சிறிய சமூக அநீதியை சட்டமாக்கியிருக்கிறது மாநில அரசு.
குஜராத் மாநிலம் இதேபோன்றதொரு இடஒதுக்கிட்டை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் சென்ட்ரல் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் பிரித்து கொடுக்க முயன்றதை, இந்த வருடம் அந்த மாநில உயர்நீதிமன்றம் தடைசெய்துவிட்டது.
தமிழக அரசின் இந்த அரசாணை, எப்படி உயர் / உச்சநீதிமன்றத்தில் இருந்து தப்பிக்கும் என்பது நமக்கு தெரியவில்லை.
உயர்நீதிமன்றதால் தடைசெய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தே மாநில அரசு இந்த திட்டத்தைக் கொண்டுவருகிறது. அப்படி தடைசெய்யப்பட்டபிறகு, பழியை நீதிமன்றத்தின்மீது போட்டுவிட்டு தப்பித்துக்கொள்வது அதிமுகவின் பாரம்பரியமான உத்தி.
நீட் தேர்வில் இருந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 85% இடங்களுக்கு விலக்கு பெறுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு! தமிழக அரசு அதைத்தவிர எல்லாவற்றையும் செய்து நம்மை திசைத் திருப்புகிறது!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக