வெள்ளி, 23 ஜூன், 2017

கிரண்பேடி .... புதுச்சேரி அரசுடான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாம்..

Krthikeyan புதுச்சேரி: எனக்கும் புதுச்சேரி அரசுக்கும் இருந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கைகளால் ஆளும் கட்சியான காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளது. இதனிடையே முதல்வர் நாரயணசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் கிரண்பேடி. இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கிரண்பேடி செயல்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி நேற்று குற்றம்சாட்டியிருந்தார். முதல்வர் அதிகாரத்தை குறைக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு கிரண்பேடி இன்று இப்தார் விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியை முதல்வர் உட்பட புதுச்சேரி எம்எல்ஏக்கள் அனைவரும் புறக்கணித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் கிரண்பேடி, முதல்வரின் நிதி அதிகாரத்தை எந்த வகையிலும் குறைக்கவில்லை. நிதி அதிகாரத்தில் நான் தலையிடுகிறேன் எனக் கூறுவது பொய்யான தகவல் எனக் கூறினார். மேலும் அரசுக்கும் எனக்கும் இருந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என்றார். முதல்வரும் ஆளுநரும் இணைந்து செயல்படுவார்களா அல்லது மீண்டும் எதாவது குழப்பத்தை ஏற்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.tamiloneindia

கருத்துகள் இல்லை: