112 அடி உயர ஆதியோகி சிலை.
கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில் ஈஷா யோகா மையம் சார்பில் கட்டப்பட்டுள்ள
விதிமீறல் கட்டிடங்களுக்கு பின் அனுமதி வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று
வருவதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின்
செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ கோவை இக்கரைபோலுவான்பட்டியில் உள்ள ஈஷா யோகா மையம் அரசுத் துறைகளிடம்
உரிய அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும், சுற்றுச்சூழலுக்கு
கேடுவிளைவிக்கும் வகையில், சுமார் 15 லட்சம் சதுர அடியில் கட்டடங்கள்
கட்டியது தொடர்பான வழக்கும், ஆதியோகி சிலை அனுமதியின்றி அமைக்கப்பட்டதில்
நடைபெற்றுள்ள விதிமீறல்கள், சுற்றுப்புறச் சூழல் மீறல்கள், பாதுகாப்பு
மீறல்கள் குறித்தும் ஆகிய இரண்டு தனித்தனி வழக்குகள் சென்னை
உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
#RSS #BJP சொல்ல சொல்ல . #EPS & Co. பணிந்து கேக்குறாங்க .
பல ஆண்டு காலமாக அரசின் பல்வேறு துறைகளும் திரும்ப, திரும்ப தொடர்ச்சியாக நினைவூட்டிய பிறகும் தன்னுடைய கட்டிடங்களுக்கு எவ்வித அனுமதியும் பெறாமல் ஈஷா யோகா மையம் கட்டிட பணிகளை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த கட்டடங்களை மூடி முத்திரையிடவும், இடிக்கவும் சம்பந்தப்பட்ட துறை மூலம் ஆணையிடப்பட்டது. ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகள் துணையோடு இந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அரசுத்துறைகள் அனைத்தும் இந்த கட்டிடங்களை கட்டியதில் மீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என சான்றளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு கோவை, மாவட்ட ஆட்சியர் பின்அனுமதி தருவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் இதேபோன்று, காருண்யாவின் கட்டிடங்களும் நொய்யல் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளன. இவை அங்கீகரிக்கப்பட்டால் நொய்யல் ஆற்றின் மூலம் பயன்பெறும் பகுதிகள் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும்.

தவறிழைத்த ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, செய்த
தவறுகளை சட்டத்திற்கு உட்பட்டது தான் என்று மோசடி செய்வதற்கான ஏற்பாடுகள்
நடைபெறுவதாக தெரிகிறது. தமிழக அரசும், அதிகாரிகளும் மீறப்பட்ட
விதிமுறைகளையே விதிகளாக மாற்றுவதற்கு முயற்சித்திருப்பது கடும்
கண்டனத்திற்குரியது. வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் வழக்கு
குறித்த நடவடிக்கைகளையும், விதிமீறல் நடந்திருக்கிறதா என்று அறிவதையும்
நீதிமன்றம் தன் கண்காணிப்பின் கீழ் நடத்தினால் மட்டுமே நியாயம்
கிடைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.
எனவே, நீதிமன்றம் மாவட்ட ஆட்சித் தலைவரால் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்படும் இந்த வழக்கு குறித்தான நிலை அறிக்கையை ஏற்கக் கூடாது எனவும்,
தனது கட்டுப்பாட்டில் விதிமீறல்கள் குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டுமெனவும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தமிழக அரசு இப்பிரச்சனையின் தீவிரத்தை கணக்கில் கொண்டு நிர்ப்பந்தத்தின்
அடிப்படையில் தற்போது சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை நீதிமன்றத்தில்
தாக்கல் செய்ய அதிகாரிகளை அனுமதிக்கக் கூடாது எனவும், தவறிழைத்த அதிகாரிகள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த ஆய்வில் ஈடுபட்டதாக
சொல்லப்படும் அதிகாரிகளை மாற்றிவிட்டு, நியாயமான நிர்ப்பந்தத்திற்கு பணியாத
அதிகாரிகள் மூலம் ஆய்வை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.tamilthehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக