Senthil Vasan M : சென்ற பதிவில் இந்த திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற புரட்டை லேசாக
புரட்டினோம். இதில் மிக முக்கியமாக பார்க்க வேண்டியது பாஜகவின் கழகங்கள் இல்லா தமிழ் நாடு என்ற கோஷம்.
எத்தனையோ குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை சொல்லியும் அவர்கள் கேட்ட பாடில்லை. இன்று வரை ஆட்சியில் வராதவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமே,
காங்கிரசை இவர்கள் சொல்லாத குற்றமா? இன்று இவர்கள் ஆட்சியில் பொருளாதாரம் கிழிந்து கிடப்பதை கேட்டால்...ஐம்பது வருட காங்கிரஸ் அழுக்கை சுத்தம் செய்வதாக கூறுகிறார்கள். மூன்று ஆண்டுகளில் என்ன செய்ய முடியும் என்ற சப்பைக்கட்டு வேறு. மத உணர்வு மித மிஞ்சி போன நமது ஆட்கள் பலரும் கேள்விகளற்ற சோம்பிகளாய் என்ன சொன்னாலும் கேளாமல் இந்த "திராவிடத்தால் வீழ்ந்தோம்" மந்திரத்தை ஓதி பரவசம் அடைகிறார்கள் .
சரி, இவர்களுக்கு பதில் சொல்லும் வழி என்ன?
பா ஜ க கணிசமான ஆண்டுகள் ஆண்ட மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தை தமிழ் நாட்டுடன் ஒப்பீடு செய்து காட்டுவது தான்.
ஒரு குடிமகன் தனது அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு முதலாக பல குறியீடுகளை வைத்தது இதை செய்தோம், முடிவு என்னமோ ஒன்று தான். இந்த இரண்டு மாநிலங்களும் 1990 முதலாக பா ஜ க வசம் இருந்தும் பெரிதாக எதையும் செய்யவில்லை.
ஆனால் மத்திய பிரதேச உலக மகா வியாபம் ஊழலை பற்றி நம்மில் பலருக்கு தெரியாதது அவர்களுக்கு ஒரு வசதி. ஏதோ பா ஜ க அதி சுத்தமான என்று ரீல் விடுகிறார்கள் (வியாபம் பற்றிய விரிவான பதிவுகளை யாரவது பதிந்தால் நலம். வியப்பும், திகைப்புமான ஒரு அராஜக ஊழல் அது!)
சரி இப்போது இந்த மூன்று மாநிலங்களும் அடிப்படையில் எப்படி என்று பார்ப்போம்.
மற்ற இரண்டு மாநிலங்களும் இந்திய நாட்டின் மத்தியில் உள்ளன . தமிழ்நாடோ கடைக்கோடி மாநிலம். இங்கே தயாராகும் ஒவ்வொரு பொருளையும் அதிக செலவு செய்து தான் உள்ளே சென்று விற்பனை செய்ய முடியும். அதையும் மீறி இந்தியாவில் இரண்டாவது தொழில் வளம் பொருந்திய மாநிலமாக விளங்குவது ஒரு தனி சாதனை. திராவிடத்தால் வீழ்ந்தோமா???
ஆறுகள், இயற்கை வளம் போன்றவற்றில் மற்ற இரு மாநிலங்களை விட தமிழ் நாடு வறிய மாநிலம் தான். மேலும் அந்த இரண்டு மாநிலங்களையும் விட அதிக சனா நெரிசல் உள்ள மாநிலம் தமிழ் நாடு, (மத்திய பிரதேஷ் போல இரு மடங்கு!) இருந்தாலும் அவற்றை விட அதிகமான விளைச்சலையும் (ஒரு ஏக்கருக்கு என்ற கணக்கில்) , அதிக தனி நபர் வருமானத்தையும் கொண்ட மாநிலமாக தமிழ் நாடு விளங்குகிறது.
எப்படி சாத்தியம்? காலம் காலமாக மனித வளங்களை பேணிக்காத்து வந்த திராவிட ஆட்சிகள் தானே?
வளங்களை கையில் வைத்துக்கொண்டு இருபது வருடங்களாக சாதிக்க முடியாத பா ஜ க. இந்த இரு மாநிலங்களும் என்ன சொல்லும்? "காவி"யத்தால் வீழ்ந்தோம் என்றா ...
ராமாயண, மஹாபாரத அரசியல் செய்யும் பிஜேபிக்கு சரியான பதம் தான்.
"காவியத்தால் வீழ்ந்தோம்"
இப்படியாக இரண்டு குறியிடுகளை தவிர மற்றதில் எல்லாம் தமிழ் நாட்டின் கீழே இரண்டு மாநிலங்களை வைத்திருக்கும் பா ஜ க வுக்கு ரஜினி யை வைத்து சொல்லப்பட்ட வசனம் நன்றாக புரிய வேண்டும்.
"ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கில்லயாம் அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம்" !
இருக்கிற ஆட்சியில் ஒழுங்காக ஆணியை பிடுங்கி விட்டு வந்து இங்கே வரவும்!!
ஒரு சில முக்கிய அளவீடுகள் உங்கள் பார்வைக்கு (முழு விவரத்துடன் இன்னும் பல அளவீடுகளுடன் பின்னர் இதே #திராவிடத்தால்_வீழ்ந்தோமா ஹாஷ் டேக்இல் வரும் )
விவரங்கள் வரும் பதிவுகளில். ஒவ்வொரு அளவீடாக வழங்கப்படும். பா ஜ க நண்பர்கள் அவர்கள் கேள்விகளை, மறுப்புகளை பதிவு செய்யுங்கள், ஆதாரத்துடன் அலசி ஆராய்ந்து மக்கள் முன் வைப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக