வியாழன், 22 ஜூன், 2017

Flashback :காமராஜ் காலத்து ஊழல்கள் பட்டியல் ... கிருஷ்ணமேனன் . கிருஷ்ணமாச்சாரி . அர்ஜுன்சிங் தந்தை...

A.Parimalam : சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல்
1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக கிருஷ்ண மேனன் இருந்த லண்டனைச் சேர்ந்த ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்தார்.
இதில் கொடுமை என்னவென்றால் அந்நிறுவனத்திற்கு மொத்த பணமும் முன்பணமாகவே வழங்கப்பட்டது

2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் 155 ஜீப்புகள் மட்டுமே, அவையும் தரம் குறைந்ததாக வந்து சேர்ந்தது.
பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்திகள் வந்தும், நேரு கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார்.
யார் ஊழல் செய்தாரோ அவரையே அத்துறைக்கு மந்திரியாக்கிய நேருவுக்கு அந்த ஊழலில் தொடர்பில்லை என சொல்லமுடியுமா?
பலகோடி ரூபாய் ஊழல் என்பது ஏழாண்டுகள் கழித்துத் தெரியவந்தது.

2) 1949ல் ராவ் சிவ பகதூர் சிங் என்பவர், ஒரு வைரச் சுரங்க உரிமத்தை புதுப்பித்து தருவதற்காக சச்சேந்திர பாரன் என்ற வைர வியாபாரியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்த ராவ் சிவ பகதூர் சிங் யார் தெரியுமா ? மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் சிங்கின் தந்தை.
3) 1951ம் ஆண்டில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப் பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு, வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.( நன்றி சவுக்கு)
4) முந்த்ரா - டி.டி.கிருஸ்ணமாச்சாரி ஊழல்
1957 ல் T.T.K. நிதி மந்திரியாக இருந்தபோது ஹரிதாஸ் முந்திரா என்பவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை ரூ. 1,26,86,100 க்கு (ஒரு கோடியே இருபத்தியாறு லட்சத்து எண்பத்தி ஆராயிரத்து நூறு ரூபாய்க்கு) L.I.C. வாங்கியது. நிதித் துறையின் முதன்மைக் காரியதரிசி திரு. H.M.பட்டேல் அப்போது L.I.C. யின் சேர்மனாக இருந்த K.R. கமல்நாதை வாங்கும்படி கூறினார். முந்திராவின் நிறுவனங்களெல்லாம் கான்பூரில் இருந்தன.
முந்திரா ஒரு தொழிலதிபரே இல்லையென்றும் ஆகவே அவர் நிறுவனத்தின் பங்குகள் உண்மையானவை இல்லையென்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு நீதிபதி சாக்லா விசாரணைக் கமிசன் அமைக்கப் பட்டது.
நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் கிருஷ்ணமாச்சாரியும் பொறுப்பு என்று நீதிபதி சாக்லா கூறினார்.
கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.
ஆனால் இதே கிருஸ்மாச்சாரிக்கு நேரு 1963 இல் மீண்டும் Finance மந்திரி பதவி வழங்கினார். இந்த டி டி கிருஷ்ணமாச்சாரியின் மகன்தான் டி டி கே வாசு எனப் அறியப்பட்ட தொழிலதிபர் , ஜெயலலிதாவின் உள்வட்ட நண்பர் . இவர் ஊரை ஏமாற்ற தாராளமாக கர்நாடக இசைக்கு காவலர் என்ற வேஷத்தை போட்டார்.  சென்னை மியுசிக் அகடெமி இவரது சொத்துதான் , இவரின் கம்பனியில்தான் சோவும்  ஆரம்ப காலங்களில் வேலை பார்த்தார்.
இதைவிட கேவலம் உண்டா?
அதன் பிறகு 1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப் பட்ட ஊழல் என எண்ணற்ற ஊழல்கள்..
இதெல்லாம் காமராசர் காங்கிரசில் இருந்த காலத்தில்தான் நடந்தது என்பதை கலைஞரை திட்டித் தீர்க்கும் காமராஜரின் வழி வந்தவர்களாக சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியுமா? தெரியாதா?
அத்தனை மோசமான காங்கிரசில் காமராசர் ஏன் இருந்தார்?
சொல்லுங்கடே

கருத்துகள் இல்லை: