ஸ்டாலினை 25 முறை தொடர்பு கொண்ட செங்கோட்டையன்: போட்டுடைத்த தோப்பு வெங்கடாசலம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாசலம், இந்த ஆட்சியில் தனது கோரிக்கைகள் நிறைவேறாதது பற்றி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை அவரது ஊரான பெருந்துறையில் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் 19ஆம் தேதி சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை கூறியுள்ளார். எத்தனை முறை என்னிடம் பேசினீர்கள் என்று செங்கோட்டையன் முகத்திற்கு நேராக ஸ்டாலின் பேசியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் பேசியது, ஸ்டாலின் பேசியது, அவை குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இதிலிருந்து தெரிவது என்னவென்றால் செங்கோட்டையன் கட்சிக்கு துரோகம் இழைத்து திமுகவோடு மறைமுக உடன்படிக்கை நடத்த முடிவு செய்துள்ளார். அது முடியாமல் போயுள்ளது. தான் யோக்கியன் தான் என சட்டமன்றத்தில் பேசும்போது அவரது முகத்திரையை எதிர்க்கட்சித் தலைவர் கிழித்துவிட்டார். இதற்கு செங்கோட்டையனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆக செங்கோட்டையன் இப்போது அதிமுக ஆட்சியை தாங்கிப் பிடிக்கும் தூண் என கூறுவதெல்லாம் ஒரு பதட்டு வேஷம்.
மரியாதை, நாகரீகம் கருதி ஸ்டாலின், இரண்டு வார்த்தையோடு முடித்திருக்கிறார். ஆனால் இதே செங்கோட்டையன் 25 முறை ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியது அப்பாவி அதிமுக தொண்டனுக்கு தெரியாது. இப்படி தனது நண்பர்களுடன் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார். ஜீவா தங்கவேல் nakkeeran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக