சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
கொல்கத்தா: நீதிபதி கர்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்
கொல்கத்தா:
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்தார்.
43 நாட்களுக்கு பின்பு நீதிபதி எஸ்.கர்ணன் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் அவரது வக்கீல் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே, 2 முறை நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இது போல் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போதும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கோவையில் கைது செய்யப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் கொல்கத்தா நகருக்கு கொண்டு செல்லப்பட்டார். விமானம் கொல்கத்தா நகரை சென்றடைந்ததும், விமான நிலையத்தில் உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்க்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் காவலுடன் அங்கிருந்து ஒரு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கர்ணன் கொல்கத்தா நகரில் உள்ள பிரசிடென்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக