பாஜக தரப்பு ஜனாதிபதி வேட்பாளரான ராம் நாத் கோவிந்தை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் சந்தித்து பேசினார்.
பாஜக தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம் நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 19-ம் தேதி டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி ஆட்சிமன்றக்குழு கூடியது. இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அலோசிக்கப்பட்டது. பிறகு பீகார் ஆளுநர் ராம் நாத் கோவிந்த் பாஜக சார்பிலான ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராம் நாத் கோவிந்துக்கு எதிர்கட்சிகளிடம் பாஜக தரப்பில் ஆதரவு கோரப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கோரினார்.
பின்னர் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைநகர் பாட்னாவில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு சென்று ராம் நாத் கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு நிதீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “ராம் நாத் கோவிந்தை சந்திப்பது என்னுடைய கடமை. அவரை சந்தித்து நான் என்னுடைய வாழ்த்துக்களையும், மரியாதையையும் தெரிவித்துள்ளேன். ராம் நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது. லாலு பிரசாத்துடனும், சோனியா காந்தியுடனும் இதுதொடர்பாக பேசியுள்ளேன். இதுபற்றி ஆலோசனை செய்யப்படும். பீகாரின் ஆளுநராக ராம் நாத் சிங் சிறப்பாக, பாகுபாடின்றி பணியாற்றியுள்ளார். மேலும் அவர் மாநில அரசுடன் நல்லுறவோடு செயல்பட்டிருக்கிறார்” என அவர் கூறினார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக