பிரபாகரன் சுதுமலையில் மக்கள் சூழ அறிக்கைவாசித்தார், ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம் என்றார், மக்கள் கைதட்டினர்.
மக்கள் மறுப்பார்கள், தன்னை ஆதரிப்பார்கள், ஆயுதம் ஒப்படைக்க விடமாட்டார்கள் என நினைத்த பிரபாகரனுக்கு பேயறைந்தது போல இருந்தது, அதனை அவரால் தாங்க முடியவில்லை.
பிரபாகரனின் முகம் அந்த கூட்டத்திலே இருண்டது, இனி மக்கள் தங்களை மறந்தே விடுவார்கள் என கருதினார்
stanley.rajan. ராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்த பழ.நெடுமாறன் அவிழ்த்துவிடுகின்றார்
நடந்தது என்ன?
இந்திய அமைதி ஒப்பந்ததை எல்லா குழுக்களும் ஏற்றன, பிரபாகரன் ஏற்கவில்லை, இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் திருச்சி வந்து பின் சென்னை வந்து ராமசந்திரனை சந்த்தித்து ஒப்பந்ததை எதிர்க்க சொன்னார் பிரபாகரன், ராமசந்திரன் கைவிரித்தார்
டெல்லிக்கு சென்றார் பிரபாகரன், ராஜிவினை சந்தித்தார். அங்கு நடந்த விஷயம் பல இழுபறி, பெரும் இழுப்பு, சுருக்கமாக இப்படி சொல்லிவிடலாம்
தனி ஈழம் எனும் கோரிக்கையிலிருந்து இறங்கிவர சம்மதித்த பிரபாகரனின் கோரிக்கை இப்படி இருந்தது,
எங்களை மட்டும் ஈழதமிழரின் பிரதிநிதியாக இந்திய அரசு நடத்தவேண்டும், ஆயுதத்தை ஒப்படைக்க மாட்டோம், வரி வசூல் பாதிக்கும் என்பதால் மாதம் ஐம்பது லட்சத்தை இந்தியா தரவேண்டும்
அதாவது நாங்கள் ஈழகோரிக்கையினை கைவிட்டாலும் எங்கள் இயக்கம் ஆயுதத்தை கீழே வைக்காது, அவர்களை பராமரிக்க எனக்கு பல லட்ச்ம் தேவை, என்பது போன்ற அடாவடியான கோரிக்கைகள்
ராஜிவிற்கோ மகா அவசரம், மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் பிரபாகரன் முரண்டுபிடிப்பார் என அவர் நினைக்கவில்லை, பிரபாகரனுக்காக ஜெயவர்த்தனேவிடம் எனக்கு இரு நாள் அவகாசம் என சொன்னால் அவர் வாய்விட்டு சிரிப்பார்
அதனால் சொல்லிபார்த்தார், எல்லோரும் ஆயுதம் ஒப்படைப்பார்கள், நீங்களும் ஒப்படைப்பீர்கள், எங்கள் ராணுவம் அங்கிருக்கும்பொழுது சிங்களன் எப்படி உங்களை தாக்குவான்? எல்லோரும் வாழட்டும், யுத்தம் உங்கள் நாட்டை பாழாக்கிவிடும் என்றெல்லாம் சொன்னார்
இந்திய அதிகாரிகளும் சொல்லிபார்த்தார், பிரபாகரன் கேட்கவில்லை
ஒரே ஒரு இந்திய அதிகாரி சொன்னார், மிஸ்டர் பாலசிங்கம், உங்கள் பிரச்சினையினை உலகம் ஒரு பொருட்டாக எண்ணாது, இன்று உங்களுக்கு இருக்கும் ஒரே பலம் நாங்கள்தான், இன்று ஒன்றுமில்லாமல் இருக்கும் உங்களுக்கு இவ்வளவு உரிமை பெற்று தருகின்றோம், இதனை விட ஒரு தீர்வு கிடைக்காது, நீங்கள் நினைக்கும் தமிழீழம் அமையாது அல்லது உங்களால் அமைக்க முடியாது" என சொல்லிபார்த்தார்
"எங்கள் பிரபாகரனிடம் இதனை விட அருமையான திட்டம் உண்டு, நடையினை கட்டுங்கள்" என சொன்னார் பாலசிங்கம்
எம்ஜிஆர் பேசியும் பலனில்லை
அதன்பின் ராஜிவ் இறங்கி வந்தார், மாதம் 50 லட்சம் தருகின்றேன், சம்மதியுங்கள், ஆயுதம் முழுமையாக ஒப்படைக்க வேண்டாம், சும்மா பழையதில் சிலவற்றை ஒப்படையுங்கள் என்றார்
அதற்கும் மேலாக தான் அணியும் குண்டு துளைக்காத சட்டையினை பிரபாகரனுக்கு அணிவித்து மகிழ்ந்து அனுப்பினார் ராஜிவ்
பணம் என்றதும் தனிஈழமாவது மண்ணாவது என ஒப்புகொண்டனர் புலிகள், உடனே இலங்கை சென்ற பிரபாகரன் சுதுமலையில் மக்கள் சூழ அறிக்கைவாசித்தார், ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம் என்றார், மக்கள் கைதட்டினர்.

ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறியது
ஈழமக்கள் இந்திய ராணுவத்தை வரவேற்றனர், அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தனர். வசந்தம் திரும்பியதாக நினைத்தனர்.
புலிகளுக்கு பொறுக்கவில்லை, வரி வசூல் பாதிக்கபட்டது, ராஜிவின் தொகை போதாது என்று வம்பிழுத்தனர். அவர்களின் அன்றைய ஒரே தேவை இந்திய ராணுவம் வெளியேற வேண்டும், தாங்கள் பழையபடி வசூலில் இறங்கி ஆளவேண்டும்
மக்களோடு கலந்து இந்திய ராணுவத்தை தாக்கி, மக்களுக்கும் இந்திய அமைதிபடைக்கும் சண்டைமூட்டிவிட்டது சாட்சாத் புலிகளே
ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லைமீறி செல்ல, ராஜிவ் அந்த தொகையினை நிறுத்தினார், அதன் பின் சிங்களனுடனும் சில ஏகாதிபத்திய நாடுகளுடனும் இணைந்த புலிகள் கொலைவெறியில் ஆடினர்
அப்பொழுதும் இந்தியா வடக்கு கிழக்கு மாகாணத்தை அமைத்து தேர்தல் நடத்தியது, புலிகளுக்கு என்றுமே ஜனநாயகம் தெரியாது, நாலுவாக்கு வாங்க மாட்டோம் என தெரிந்து தேர்தலை புறக்கணித்தனர், விளைவு வரதராஜ பெருமாள் முதல்வரானார்
பொறுக்கா புலிகளின் கோபம் தாண்டவமாடியது, இந்திய அமைதிபடை அடிவாங்கியே போராடியது, அது முழுபலத்துடன் இறங்கினால் அன்று ஈழமே அழிந்திருக்கும், ஆம் புலிகளுக்கும் மக்களுக்கும் வேறுபாடு பஞ்சாபிய சீக்கியனுக்கு எப்படி புரியும்
ஒரு விஷயத்தை எல்லோரும் மறைக்கின்றார்கள், அன்றைய அமைதிபடையினை அனுப்பிய இந்திய ஜெனரல் சுந்த்ர்ஜி ஒரு தமிழர், அந்த தமிழர் தான் அமைதிபடையின் உச்ச தலமை
அதனால்தான் அமைதிபடை அமைதியாக போராடியது, ஈழம் அழியாமல் காத்து 1500 இந்திய வீரர்ர்கள் சாக அந்த சுந்தர்ஜியின் மென்மையான அணுகுமுறையே காரணம், கைகள் கட்டபட்ட அமைதிபடையினைத்தான் புலிகள் முதுகில் குத்தினர்
பெரும் புரட்டும், பொய்யும் மானமின்றி சிங்களனுடன் கூட்டு சேர்ந்தும் நிலமையினை சிக்கலாக்கி அமைதிபடை வெளியேற வைத்தனர் புலிகள்
அதுவும் மணலாற்றில் சுற்றி வளைக்கபட்டிருந்தார் பிரபாகரன், இரு நாளில் அவரை தூக்கியிருப்பார்கள் அப்பொழுதுதான் கலைஞர் விபிசிங்கிற்கு அழுத்தம் கொடுத்து அம்முடிவினை கைவிட சொல்லி, அமைதிபடையும் வந்தது
அதன் பின் ராஜிவினையும் கொன்றாகிவிட்டது, கொல்லபட்டது ராஜிவ் அல்ல , ஈழமக்களின் பாதுகாப்பு, வாழ்வு, எதிர்காலம் எல்லாம்.
ஆக ராஜிவிற்கு கொடுத்த வாக்கினைத்தான் புலிகள் காப்பாற்றவில்லையே தவிர, ராஜிவ் அல்ல
புலிகளை விட ராஜிவிற்கு ஈழமக்களின் அமைதியான வாழ்வு அவசியமாய் இருந்தது, புலிகளுக்கோ தங்களின் வாழ்வும், ஆட்சியுமே அவசியமாய் இருந்தன
இதனை எல்லாம் மறைத்து அந்த பழ.நெடுமாறன் கட்டுகதைகளை அவிழ்த்துவிட்டுகொண்டிருக்கின்றார்
அவர் ஒவ்வொரு கதையாக அவிழ்க்க அவிழ்க்க நாமும் பல உண்மைகளை சொல்லிகொண்டே இருப்போம்...
பழ.நெடுமாறன் தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஈழமக்களுக்கும் ஒரு சாபக்கேடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக