"ஜெயலலிதாவுக்கு கார்டன் நிதி என்ற பெயரில் ஒவ்வொரு அமைச்சரும் மாதம் முப்பது கோடிக்கு மேல்
கப்பம் கட்டி வந்தனர்
Prabha
சென்னை: கொங்கு மண்டல அமைச்சர்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காக, தினகரன்
தலைமையை ஏற்று 34 எம்.எல்.ஏக்கள் வந்தார்கள். ' இந்த எம்.எல்.ஏக்கள்
அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தைவிட, கார்டன் கணக்குகளில்தான் குறியாக
இருந்தார்கள்' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
திகார் சிறையில் இருந்து தினகரன் வந்த நாளில், எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல்,
தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மட்டுமே அவரைச் சந்தித்தனர். மறுநாளில்
இருந்து தினமும் சில எம்.எல்.ஏக்கள், தினகரனை சந்தித்து வந்தனர்.
இப்படியொரு அதிர்ச்சி சந்திப்பை விரும்பாத அமைச்சர்கள், தங்கள்
மாவட்டங்களில் இருந்து, தினகரன் ஆதரவு முழக்கத்தை முன்வைத்த
எம்.எல்.ஏக்களிடம் பேசியுள்ளனர்.
அவர்களுக்குப் பதில் கொடுத்த எம்.எல்.ஏக்கள், ' உங்கள் தயவில்தான்
எங்களுக்கு சீட் கிடைத்தது. தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக,
பத்து கோடி ரூபாய் வரையில் அம்மா செலவழித்தார். நீங்களும் வெற்றிக்காக
உழைத்தீர்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், எங்களுடைய
கோரிக்கைகளை யார் காது கொடுத்து கேட்கிறார்கள்? உங்கள் தொகுதியை
மட்டும்தான் கவனிக்கிறீர்கள்' எனக் கூற, ' என்ன செய்ய வேண்டும்?' எனக்
கேட்டுள்ளனர்.
பெரிதாக நாங்கள் எதையும் கேட்கப் போவதில்லை. மாவட்டத்தில் நடக்கும்
பணிகளில் எங்களுக்கு உரிய பங்கு வந்துவிடுகிறது.
தவிர,
கார்டனில் அம்மா இருந்த நாட்களில், மாதம்தோறும் கார்டன் நிதி என்ற பெயரில்,
ஆறு சதவீதத் தொகையைக் கொடுத்து வந்துள்ளனர்.
இந்தக் கணக்கே பல கோடிகள்
வரும்.
கார்டன் நிதி
கார்டன் நிதி
தற்போது இந்த பணம் எதுவும் கார்டனுக்குச் செல்வதில்லை. உங்கள்
கணக்குகளில்தான் எடுத்துக் கொள்கிறீர்கள். கட்சி நிதி, கார்டன் நிதி என
இரண்டு வடிவங்களில் பணம் வருகிறது. இந்தப் பணத்தை எங்களுக்குப் பிரித்துக்
கொடுங்கள். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் சொல்வதைக் கேட்கிறோம்' எனச்
சொல்ல, அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அமைச்சர்கள்.
கடந்த காலம்
கடந்த காலம்
" கார்டன் நிதி என்ற பெயரில் ஒவ்வொரு அமைச்சரும் முப்பது கோடிக்கு மேல்
கப்பம் கட்டி வந்தனர். இந்தப் பணத்தை எம்.எல்.ஏக்கள் கேட்பதைத்தான்
அமைச்சர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த காலங்களில்
அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பாளராக இருந்து, எடப்பாடிதான் கார்டனுக்குள்
சென்று வந்தார். அவருக்கு இந்தக் கணக்கு விவரங்கள் அத்துப்படி.
முதல்வர் ஜகா
அவரிடமும் இதே கோரிக்கையை எம்.எல்.ஏக்கள் வைத்துள்ளனர். அவரும்,
மாவட்டத்தில் நடக்கும் பணிகளில், உங்கள் ஆட்களுக்கு முன்னுரிமை தர ஏற்பாடு
செய்கிறேன் என்றதோடு முடித்துக் கொண்டார். அமைச்சர்களோ, ' தொகுதி
மக்களுக்கு யார் என்றே தெரியாத, உங்களை எல்லாம் எம்.எல்.ஏக்கள் ஆனதுதான்
நாங்கள் செய்த தவறு' என புலம்பி வருகின்றனர்" என்கிறார் ஆளும்கட்சி
நிர்வாகி ஒருவர்.
tamil.oneindia.com/n
tamil.oneindia.com/n
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக