நீதித் துறையின் வீழ்ச்சி.. கர்ணன் கைது.
முன்னாள் நீதிபதி கர்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல்களை அப்பட்டமாக குழி தோண்டி புதைத்துவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு எனும் ஆயுதத்தால் கர்ணன் தண்டிக்கப்பட்டுள்ளார். மேல்முறையீட்டு மன்றமே இதை செய்துள்ளதின் மூலம் தனி நபருக்கு கிடைக்க வேண்டிய சட்ட நிவாரணங்களையும் சவக்குழிக்கு அனுப்பியுள்ளது உச்ச நீதி மன்றம். இது ஐநா வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்பது கூடுதல் அம்சம். நாடாளுமன்றம் தீர்க்க வேண்டிய பிரச்சனையை நீதிமன்ற அவைக்குள் தீர்க்கும் புது நடைமுறையை உருவாக்கி அரசமைப்பு சட்டத்தை கேலிக்குரியதாக்கியுள்ளனர் உச்ச நீதி மன்ற நீதிபதிகள். ஜனநாயகத்தின் ஒரு தூண் சரிந்துள்ளது. காப்பாற்ற வேண்டிய மற்ற தூண்களும் தூங்கிக் கொண்டுள்ளன. நான்காவது தூணான ஊடகம் ஜால்றா அடித்துக் கொண்டிருக்கிறது.

எனினும் கீழமை நீதிமன்றங்களானாலும், உயர்நீதிமன்றங்களானாலும் இதுவரை பதவி
நீக்கம் செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் தலித்துகளே. சாதி வெறி
தலைவிரித்தாடும் நாட்டில், நீதித்துறையானது ஊழலும், சாதி வெறியும் மலிந்த
துறை என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது.
தமிழர்களும், சமூக நீதிக் காவலர்களும் வாய் முடி பேசா மடந்தைகளாக இருங்கள். அதுதானே நீங்கள் எப்போதும் செய்வது.
சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டது.- சன்னா gothama sannaa

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக