தளபதி செயல் தலைவர் ஆகிறார் என்பது கடைசி வரை யாருக்குமே தெரியாது என்கிறது அந்த வார இதழ்.
குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தெரியாது. முதல் நாள் இரவு தான் பேராசிரியருக்கே தெரியும் அதன் பின் கை மீறிப் போய் விட்டதை உணர்ந்து தான் பொதுக்குழுவில் அறிவிக்க, அறிக்கையே எழுதப் பட்டது என்கிறார்கள்.
இவ்வளவு ஏன் குடும்பத்தில் நல்லது கெட்டது அனைத்திலும் பங்கு பெரும் மூத்தமகள் செல்விக்கும் தெரியாது.
கலைஞரை பொதுக்குழுவிற்கு அழைத்துப் போய்விடுவார்கள் என்று தான் அழகிரியும் நினைத்தார்.
ஆனால் காலையில் கலைஞர் போகவில்லை என்று தெரிந்ததும் மதுரையில் இருந்து போன்கள் பறந்தது.ஆனால் யாருக்கும் விவரம் தெரியவில்லை.
அதைவிட அதிர்ச்சி தளபதிக்கு செயல் தலைவர் பதவி கொடுப்பார்கள் என்று அழகிரி கனவில் கூட நினைக்கவே இல்லை. அதிர்ந்து உட்கார்ந்து விட்டார்.
கனி மொழிக்கு புதிதாக ஒரு பதவி கிடைக்கும் என்று நேற்று இரவுவரை எதிர் பார்த்தார். அழகிரி. அதுவும் இல்லை.
வெள்ளக்கோவில் சாமிநாதன் இளைஞர் அணிச் செயலாளர் என அறிவிப்பு வந்த உடன் நொந்து போய் இடிந்து போய் அழகிரி உட்கார்ந்து விட்டார்.
செல்விக்கு போன் போட்டு கழுத்தை அறுதுட்டீங்க என்று கலங்கி இருக்கிறார். செல்வியும் தனக்கே எந்த விஷயங்களும் சொல்லப்படுவதே இல்லை.
அப்பாவோடு முடிந்து போனது, இனி எதிலும் நான் தலையிட மாட்டேன் என்று அவரும் கலங்க, முடிவிற்கு வந்தார் அழகிரி.
இனி மதுரை, சென்னை இரண்டும் வீண். எந்த அரசியல் எதிர் காலமும் இனி இல்லை அமெரிக்கா சென்று மகள் வீட்டோடு தங்கி செட்டில் ஆகி விடுவது என்று.
அதிர்ந்து போய் இருக்கிறது குடும்பம். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக