வியாழன், 26 ஜனவரி, 2017

ஜல்லிகட்டை பார்த்து மிரண்ட அதிமுக பாஜக கூட்டு சதி ! போலீஸ் வன்முறை! (அதிகாரி தகவல்)

ஆட்சிக்கு எதிராக மக்களுக்கு தைரியம் வந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்தில் அதிமுகவும் பாஜகவும் போலீஸ் வன்முறையை ஏவி விட்டது . பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு இடையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் இந்த விடயத்தில் இருவரும் ஒற்றுமையாக இயங்கினார்கள். அதற்கு முக்கிய காரணம் பாஜக.
ஜல்லிகட்டு போராட்டம்  ஒவ்வொருவரின் நோக்கத்திலும் , ஒவ்வொரு விதமான நோக்கங்கள், கூட்டல் கழித்தல் கணக்குகள்  இருந்தது என்பது தற்போது ஓரளவு உறுதியாகி கொண்டிருக்கிறது . இறுதியில் நடந்த போலீசின் அத்துமீறல்கள் கூட  அத்தனை பேருக்கும் தெரிந்தே நடந்த இருக்கிறது .இது ஒரு கூட்டு முயற்சியோ  என்ற சந்தேகம் உறுதியாகி கொண்டிருக்கிறது.
ஒரு பிரபல அதிகாரியின் நெருங்கிய நண்பர் மூலம் சில தகவல்கள் கொஞ்சம் அதிர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது.
ஜல்லிகட்டு விவகாரத்தை வைத்து பாஜகவுக்கு ஒரு வலுவான தளம் அமைக்க முடியும் என்று ஆர் எஸ் எஸ் பரிவாரம் உறுதியாக நம்பியது. அதற்குரிய முறையில் தமிழிசைக்கும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும்,  ஹெச் ராஜாவுக்கும்  மிக தெளிவாக வகுப்புக்கள் எடுக்கப்பட்டன.அவர்களும் அதற்கேற்ற மாதிரி ஜல்லிகட்டு வரும் வரும் என்று முதல்ல முழக்கியது  அப்புறம் மன்னிப்பு கேட்கிறேன் முடியல்ல என்றது எல்லாமே நாடகம்தான்.


ஜல்லிகட்டுத்தான் தமிழகத்தின் தலையாய பிரச்சனை என்பது போல  காட்டும் முயற்சிகள் மிகவும் கச்சிதமாக அவர்கள் முன்னெடுத்தார்கள் .
நீட் பொது நுழைவு தேர்வு ,காவிரி , விவசாயிகள் தற்கொலை , பணமதிப்பிழப்பு போன்ற பல பிரச்சனைகள் மட்டுமல்ல ஜெயலலிதாவின் மரணம் கூட பாஜகவை மிகவும் சோதனைக்கு உள்ளாக்கியது.
மோடிக்கு தெரியாத மர்மம் ஒன்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் கிடையாது. சசிகலாவுக்கு என்னனே தெரியுமோ அதுவெல்லாம் மோடிக்கும் தெரியும். இதில் இருவரும் கூட்டு பங்காளிகள். அதுமட்டும் அல்ல பன்னீரும் மோடிக்கு கூட்டாளிதான்.
சசியையும் பன்னீர்செல்வத்தையும் மிரட்டி மிரட்டி தங்கள் காரியத்தை சாதித்து கொள்ளும் நோக்கம்தான் ஆர் எஸ் எஸ் பாஜக பரிவரங்களுக்கு இருந்தது  . ஜல்லிகட்டு ஒரு அலாவுதீனின் அற்புத விளக்காக தெரிந்தது.
எல்லாம் சரியாக அவர்களின் திட்டப்படியே ஜல்லிகட்டு போராட்டம் இடம்பெற்றது .
ஆனால் மக்கள் ஜல்லிகட்டு போராட்டத்தை எடுத்த வேகம்  மத்திய மாநில ஆட்சியாளர்களின் வெற்றி கனவுகளை தகர்த்து விட்டது .
ஒவ்வொரு நாளும் போராட்டம் கொழுந்து விட்டெரிய தொடங்கியது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்றுதான்.
அதிலும்  ஜல்லிகட்டு போராட்டம் இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் பெருத்த பிரசார வெளிச்சத்தை பெற்றது அவர்களை மிகவும் பாதித்து விட்டது.
ஜல்லிகட்டை மோடியின் தலைமையின் கீழ் நடத்த எண்ணியவர்களுக்கு மோடி தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்தால் கிடைக்கும் வரவேற்பு படு கேவலமாகி விடும் என்று புரிந்தது.
இந்த போராட்டத்தால் தங்களுக்கு எந்தவித இலாபமும் இல்லை என்றது உடனே இதை நிறுத்தலாம் என்று கொஞ்சம் முயற்சித்து பார்த்தார்கள்.
நிலைமை கட்டுக்கு மீறி போயிருந்தது.
ஜல்லிகட்டை எப்படியும் அனுமதித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. அதிலும்  ஜல்லிகட்டு அனுமதிக்கு எந்தவித உரிமையும் கூட கோரமுடியாத அளவு ஜல்லிகட்டு மக்கள் கையில் போயிருந்தது.

ஜல்லிகட்டை அனுமதிக்கவும் வேண்டும் .ஆனால் போராட்டத்தின்  வெற்றி எதிரிகள்  (இளைஞர்கள்/ மக்கள் ) பக்கம் போய்விட கூடாது. இது மிகவும் சிக்கலான முடிச்சாகி விட்டிருந்தது.
பன்னீர்செல்வமும் சசிகலாவும் முற்று முழுதாக மோடி,வெங்கையா நாயுடு கட்டுப்பாட்டில் இருந்தனர் .இப்பொழுதும் அப்படித்தான்.
இறுதிநாள் விவகாரம் மிகவும் கவனமாக கையாளப்பட்டது.
ஜல்லிகட்டு அனுமதி கொடுத்ததும் நிச்சயம் பாஜக அதிமுகவை வெற்றி கொண்ட எழுச்சி இளைஞர் மக்கள் மத்தியில் உண்டாகும்.
அவர்களின் வெற்றி முழக்கத்தை எவ்வளவு தூரம் இல்லாமல் செய்ய முடியுமோ அவ்வளதூரம் செய்யவேண்டும்
எல்லாவற்றிலும் பார்க்க தங்கள் தோல்வியை மறைக்க ஜல்லிகட்டு வெற்றியை அசிங்க படுத்த வேண்டிய தேவை சசிகலா பன்னீர்செல்வம் மட்டுமல்லாமல் பெரிய அளவில் பாஜகவுக்கும் பிரதமருக்கும் இருந்தது.
இந்தியா முழுவதும் ஜல்லிகட்டு மோடிக்கு எதிரான போர் முழக்கமாக பார்க்கப்பட்டது.
ஜல்லிகட்டு வெற்றியை என்ன விலை கொடுத்தாவது அசிக்கப்படுத்தியே தீருவது என்று இரு கட்சிகளும் முடிவெடுத்து அரசு இயந்திரத்தை மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
போலீசின் வன்முறை நடந்து கொண்டிருந்த பொழுது பன்னீர்செல்வமும் சசிகலாவும் மோடியும் வெங்கைய நாயுடுவும் தமிழிசையும் பொன்.ராதாவும் மட்டுமல்ல மேலும் பல திரை மறைவு பிரபலங்களும் கூடவே தொடர்பில் இருந்தார்கள்.
வன்முறையில் இடப்பெற்ற சகல சம்பவங்களும் இவர்களுக்கு தெரிந்தே இடம்பெற்றது. அடிக்கடி உத்தரவுகளும் பிறப்பித்து கொண்டிருந்தார்கள்.
இவர்கள் இன்னும் சமுக வலைதளங்களின் பலத்தை புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்தாலும் வேறு வழி இல்லாமல்  ஜல்லிகட்டு போராட்டத்தை கேவலப்படுத்த எண்ணி தாங்கள் கேவலப்பட்டு போயுள்ளனர்.
ஆட்சிக்கு எதிராக மக்களுக்கு தைரியம் வந்து விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில்தான் அதிமுகவும் பாஜகவும் இயங்கியது.
பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு இடையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் இந்த விடயத்தில் இருவரும் ஒற்றுமையாக இயங்கினார்கள். அதற்கு முக்கிய காரணம் பாஜக.
திமுகவுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனால் அவர்களை போராட்டகாரர்கள் ஒதுக்கி வைத்ததினால் அவர்களும் நாம் நன்மை செய்தாலும் ஏதாவது பழி சுமத்தி விடுவார்களே என்று அமைதியாக இருந்து விட்டார்கள்.  முகநூல் பதிவு  பூஷ்  ஜோரா
        

கருத்துகள் இல்லை: