கடந்த
இதழில், "அவசர சட்டத்திருத்தம் தயார் செய்து , அதற்கு மத்திய அரசின்
முக்கிய துறைகளின் அனுமதியை பெற்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி
வைக்கப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த எந்தச் சிக்கலும் இனி எப்போதும்
வராதபடிக்குத்தான் திருத்தம் செய்திருக்கிறோம். நீதிமன்றத் தடைகளை அது
தாண்டுகிறதா என்பதைப் பொறுத்தே மத்திய அரசின் உண்மையான முகம் தெரியும்' என
அதிகாரிகள் சுட்டிக்காட்டுவதாக எழுதியிருந் தோம். தமிழக அரசின் அவசர சட்ட
திருத்தத்தின் முன்வடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிரந்தர சட்ட
வடிவம் பெற்றிருக்கிறது. நாம் எழுதியிருந்தது போலவே, ஜல்லிக்கட்டு என்பது
மிருக வதையாகாது என விலக்கு அளிக் கப்பட்ட பட்டியலில் ஜல்லிக் கட்டை
சேர்த்திருக்கிறது தமிழக அரசு.
(சட்டத்தின் அம்சங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கருத்துடன் கூடிய கட்டுரையை 36-37ஆம் பக்கத்தில் காண்க) ஜல்லிக்கட்டுக் காக நீண்ட வருடங்களாகப் போராடி வரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சி யின் செய்தித் தொடர்பாளரு மான சிவ.ராஜசேகரன் நம்மிடம், "தமிழக அரசு நிறைவேற்றி யிருக்கும் சட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது. வதையாகாது என்கிற பட்டிய லில் ஜல்லிக்கட்டை சேர்த்தாலே போதும். தடை நீங்கிவிடும். அதனால், காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டியது தேவை யில்லை. மாநில அரசின் அவசர சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத் திருப்பதால் உச்சநீதிமன்றத் தடையும் சாத்தியமில்லை. அதேசமயம், 9-வது அட்ட வணையில் இந்த சட்டத் திருத்தத்தை இணைப்பது அவசியம். அப்போதுதான் முழுமையான சட்டப்பாதுகாப்பு கிடைக்கும்'' என்கிறார். 9 - வது அட்டவணையில் இணைத் தாலும் சில சிக்கல்கள் இருப்பதை மறந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் எதி ரொலிக்கவே செய்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக