கும்பல்
சேர்ற எல்லா இடத்துலயும் பத்து செகண்ட் பவர் கட்டானா, கூட்டத்தில் பெண்களை
காப்பத்துறது தான் பெரிய விஷயம். மெரினா பீச்சில் பல்லாயிர கணக்குல திரண்ட
கூட்டத்துல, ஏகப்பட்ட பொண்ணுங்களும் அவங்க அம்மாக்களும் கலந்து
கொண்டிருந்தாங்க. ஆனா, ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை.
ராத்திரியும்
அங்கயே இருந்தாங்க. அரசாங்கம் லைட்டை எல்லாம் அணச்சிருச்சுனு தெரிஞ்சதும்
பகீர்னு ஆயிருச்சு. ஆனா. ஒரு அசம்பாவிதம், ஒரு புகார், ஒரு அழுகை இல்லை.
பத்தர மாத்து தங்கம்னு நிரூபிச்சுட்டீங்கடா நம்ம தமிழர்கள்.
ஜல்லிக்கட்டு
போராட்டம் ஜெயிச்சாலும் தோத்தாலும் எனக்கு அது பெருசுல்ல. இரவா
இருந்தாலும் சரி, இருட்டா ஆக்கினாலும் சரி பொண்ணுங்களுக்கு காவலே
நாங்கதான்னு காண்பித்து விட்டார்கள் நம்ம நாட்டு இளைஞர்கள்.
அந்த
நாகரிகத்துக்கு முன்னாடி, அந்த பண்பாட்டுக்கு முன்னாடி, இந்த உலகமே வெறும்
தூசிடா. ஒவ்வொரு ஸ்டேட்ல உள்ள மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உங்க
நடத்தை ஒரு பாடமா இருக்கும்னு அடிச்சு சொல்லுவேன்.
அந்த
தமிழ் பண்பாட்டை, பாரம்பரியத்தை மெரினா பீச்சில் உணர்ச்சிக்
கொந்தளிப்புக்கு மத்தியிலும் தடம் புரளாமல் காத்து நின்ற தமிழ்நாட்டு
மாணவர்கள், இளைஞர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்று, மற்ற நாடுகளில்
உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றார்கள். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக