மகாராஷ்டிராவின்
நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கவிருக்கும்
நிலையில், ரேக்ளா பந்தயங்களுக்கு தடை விதித்ததற்கு எதிராக போராட்டங்கள்
தொடங்கியிருக்கின்றன. சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர
பட்னாவிஸிடம் தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவந்தது
போலவே, மகாராஷ்டிராவிலும் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டது.
உள்ளூர் விவசாயிகளுடன் இணைந்து பூனேவின் சகன் பகுதி அருகே போராட்டம் நடத்தியிருக்கிறது சிவசேனா கட்சி. பாஜக-வுடன் சீட்டுகளைப் பகிர்ந்துகொள்வது குறித்த பேச்சுவார்த்தை வெற்றியில் முடியாதநிலையில் சிவசேனா இவ்வாறான போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருந்த நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தால், ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அவசரச் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. தமிழகத்தின் ஆளுநரான வித்யாசாகர் ராவ் தான் மகாராஷ்டிராவுக்கும் ஆளுநராக இருக்கிறார். சிவசேனாவின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் படேல், ‘தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைப் போல பட்னாவிஸ் நடந்துகொள்ள வேண்டும். 2014ஆம் ஆண்டு ரேக்ளா பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட தடையை பிரதமருடன் இணைந்து பேசி நீக்க வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக