வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஜல்லிகட்டுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது

புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் விதமாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஏதும் தொடரப்பட்டிருந்தால், அது வாபஸ் பெறப்படும் என வாரியத்தின் செயலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வாரியத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான அஞ்சலி ஷர்மாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. விலங்குகள் நல வாரியம் சார்பில், அது போன்று ஏதேனும் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அது உடனடியாக வாபஸ் பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுப்ரீம் கோர்ட்டிலோ அல்லது நாட்டின் எந்த கோர்ட்டிலாவது விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் வழக்கு தொடர வேண்டும் என்றால், வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என்றும் வழக்கறிஞருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மாலைமலர்

கருத்துகள் இல்லை: