தமிழர்களின் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கக்கோரி உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தது.
இந்த போராட்டங்களில், சென்னை மெரீனாவில் நடைபெற்ற போராட்டம் லட்சக்கணக்கான இளைஞர்களையும் மாணவர்களையும் குவித்து வரலாறு காணாத அறவழிப்போராட்டத்தினை நடத்தி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மாநில அரசு சட்டசபையில் அவசர சட்டத்தை இயற்றியது.
இந்நிலையில், இந்த உலக சாதனை அறவழிப்போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு போராட்ட நினைவாக மெரினாவில்காளையின் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக