மீனவ குடியிருப்புகளில் போலிஸ் நுழைந்து தங்களைத் தாக்கியபோதுகூட, காலையில் மாணவர் மீது நடந்த தடியடியை, தங்கள் குழந்தைகள் மீது நடந்ததைபோல் பொங்கி பேசினார்கள். மயிலையில் ரூதர்புரம் தலித் மக்கள் மீதும் அவர்கள் உடமைகள் மீது நடந்த கொடூர தாக்குதல், மாணவர்களுக்காக எம் மக்கள் சுமந்த சிலுவை. இப்படித் தியாக உணர்வோடு போராடிய எம் மீனவ, தலித் மக்களைத்தான் (ரஜினி போன்றவர்கள்) நடிகர்களும், பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் ‘சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள்’ என்று ஜாடைமாடையாக சொல்கிறார்கள். இது காவல் துறை நடத்திய வன்முறையை விடக் கொடூரமானது. மாணவர்களே, உங்களைக் காப்பாற்றிய மக்களை மறந்து விடாதீர்கள்.< உழைக்கும் மக்கள் நீங்கள் உதவி செய்வீர்கள் என்பதற்காகப் போராட வில்லை. அது அவர்களின் இயல்பு. அந்த இயல்பை எம் மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் அவர்களுக்காகப் போராட வேண்டியதும் உங்களின் இயல்பாக மாற்றிக் கொள்ளுங்கள். அதன் துவக்கமாக, எம் மக்களை நேரில் சந்தித்து நன்றி சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் போரட்டம் முழு வெற்றிப் பெற்றதாகும்.
வெள்ளி, 27 ஜனவரி, 2017
மதிமாறன் : போலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு –
மீனவ குடியிருப்புகளில் போலிஸ் நுழைந்து தங்களைத் தாக்கியபோதுகூட, காலையில் மாணவர் மீது நடந்த தடியடியை, தங்கள் குழந்தைகள் மீது நடந்ததைபோல் பொங்கி பேசினார்கள். மயிலையில் ரூதர்புரம் தலித் மக்கள் மீதும் அவர்கள் உடமைகள் மீது நடந்த கொடூர தாக்குதல், மாணவர்களுக்காக எம் மக்கள் சுமந்த சிலுவை. இப்படித் தியாக உணர்வோடு போராடிய எம் மீனவ, தலித் மக்களைத்தான் (ரஜினி போன்றவர்கள்) நடிகர்களும், பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் ‘சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள்’ என்று ஜாடைமாடையாக சொல்கிறார்கள். இது காவல் துறை நடத்திய வன்முறையை விடக் கொடூரமானது. மாணவர்களே, உங்களைக் காப்பாற்றிய மக்களை மறந்து விடாதீர்கள்.< உழைக்கும் மக்கள் நீங்கள் உதவி செய்வீர்கள் என்பதற்காகப் போராட வில்லை. அது அவர்களின் இயல்பு. அந்த இயல்பை எம் மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் அவர்களுக்காகப் போராட வேண்டியதும் உங்களின் இயல்பாக மாற்றிக் கொள்ளுங்கள். அதன் துவக்கமாக, எம் மக்களை நேரில் சந்தித்து நன்றி சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் போரட்டம் முழு வெற்றிப் பெற்றதாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக