திங்கள், 23 ஜனவரி, 2017

போர்க்களமானது சென்னை ... வாட்சைப் , முகநூல்களின் வரும் செய்திகள் படங்கள்


Sudhakar Chandra 26 mins · இந்த வாட்ஸப், முகநூல்... இளைஞர்களை ஒன்று சேர்க்க உதவியது..... தற்பொழுது போலிஸின் அராஜகத்தையும் தோல் உரித்துக்காட்டுகிறது... போராடிய ஒவ்வொருவரின் கையிலும் ஒரு செல் போன்... உங்கள் லட்சணத்தை உலகத்திற்கு காட்டும்... Biased media எதுவும் தேவையில்லை...

கவிஞர் அறிவுமதி: நான் மருத்துவமனையில் சேர்கிறேன் என்று இணையத்தில் செய்தி வெளியிட்டுவிட்டு ராகவா லாரன்ஸ் வெளியேறுகிறார்.. முதல்வருக்கு நன்றி என்று கடிதம் கொடுத்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி வெளியேறுகிறார்.. கொடிய மிதிக்கறாங்க, கோக்கைத் திட்டறாங்க என்று திகிலடைந்து ஆதி வெளியேறுகிறார் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. மூணு மாசம் தள்ளி வைப்போம் என்று அந்தப் பெரிய மனிதர்களும் வெளியேறுகிறார்கள்.. எல்லாம் நேற்று மாலை ஓரிரு மணி நேரத்தில் நடக்கிறது.. உள்ளே இருந்த தன் பிள்ளைகளை வெளியேற்றிய அரசு இன்று நம் பிள்ளைகளை அடிக்கிறது.. இவர்கள் சொல்கிறார்கள் 'மாணவர்களுக்குள் அந்நியர்கள் ஊடுருவிவிட்டார்கள்..அதனால் வெளியேறினோம்...' ஆறு நாட்கள் மாணவர்களின் போராட்டக்களத்தில் உள்ளே இருந்த இந்த சமரச சன்மார்க்கவாதிகள் எந்தக்கல்லூரிகளில் படிக்கிறார்கள்...
மாணவர்களைத் தீவீரவாதிகளாக்க உங்கள் எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த கதைகளைச் சொல்லும் நல்லவர்களே.. 'அடிக்கப்போறாங்க ஓடிருங்க.. 'என்று உங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை ஆறு நாட்கள் உங்களோடு உண்டு உறங்கிய எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே..  நன்றி: கவிஞர் அறிவுமதி

Damodaran Chennai 51 mins · பா. உதயகுமார் உதயகுமார் 9 mins · திருவல்லிக்கேணியில் இருக்கும் ராஜ் கூறும் உண்மை தகவல்! டி3 போலீஸ் ஸ்டேஷை் (ஐஸ் அவுஸ்) துரைப்பாண்டி; நாகராஜ் என்ற சீருடை அணிந்த இரண்டு காவலர்கள் சீருடை அணியாத இரண்டு காவலரனகளிடம் பெட்ரோல் அடைத்த பாட்டில்களைக் கொடுத்து போலீஸ் ஸ்டேஷனை எரிக்கச் சொன்னர்கள் அதனை நான் அருகிலிருந்து பார்த்தேன் என்று சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராஜ் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார் இதனை ஆடியோவாக பதிவு செய்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாட்ஸ்அப் குரூப்புகளிலும் பகிரப்பட்டது. எதிர்காலத்தில் காவல்துறை மீது வழக்கு தொடர இது பேருதவி புரியும். இதனை அனைவருக்கும் பகிருங்கள் தோழர்களே....! பா. உதயகுமார்

 Damodaran Chennai 19 mins · வாடிவாசலை நானே திறப்பேன் என்று சொன்னவர் அந்த மண்ணில் கால் வைக்க முடியாமலே மூக்குடைந்து சென்னைக்கு திரும்பிய போதே மாணவர்களை இளைஞர்களை பழிக்கு பழி தீர்ப்பதென்று....முடிவாகிவிட்டது. அதிகாலை கொலைவெறியாட்டம் தொடங்கிவிட்டது. எதுவரை தொடருமோ ?

கருத்துகள் இல்லை: