லோக்
தால் கட்சியின் தலைவர் சுனில் சிங், தன் சொந்த வீட்டிலேயே வீட்டுக்
காவலில் வைக்கப்பட்டிருக்கும் முலாயம் சிங் யாதவுக்கு பாதுகாப்பு அளிக்க
வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். உத்திரப்பிரதேச சட்டசபைத்
தேர்தல்களில் லோக் தால் வேட்பாளர்களுக்கு முலாயம் சிங் யாதவின் ஆதரவு
இருக்கிறது எனக்கூறிய அவர், “லோக் தால் வேட்பாளர்களுக்கு முலாயம் சிங்
யாதவின் ஆதரவு இருக்கிறது, கூட்டணி அறிவிப்பதாக இருந்தது. ஆனால் அகிலேஷ்
அதை அனுமதிக்கவில்லை. முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவரை வீட்டுக் காவலில்
வைத்திருக்கிறார். யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை” என உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் சிங்
தெரிவித்திருக்கிறார்.
“முலாயம் வீட்டில் இருக்கும் அத்தனை ஊழியர்களும் முதல்வரின் அறிவுறுத்தலின்கீழ் இயங்குகின்றனர். மாநில பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடைய தாக்கத்தின்கீழ்தான் வேலை செய்கின்றனர். கன்ஷிராம் அல்லது ஜெயலலிதாவுக்கு நடந்ததுபோல அசம்பாவிதம் எதாவது நடக்க வாய்ப்பிருக்கிறது” என்று அவர் கூறினார். முலாயம் சிங் யாதவ் வீட்டில் இருக்கும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். முலாயம்தான் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், அவர் அதற்காக பிரச்சாரமும் செய்வார் என அவர் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக