வியாழன், 26 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றில் விலங்கு ஆர்வலர்கள் வழக்கு.. போலிஸ் குதிரை சக்திமானை அடித்து கொன்ற பாஜக எம்பி மீது ஒரு வழக்கும் இல்லை


புதுடில்லி,: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை எதிர்த்து, பிராணிகள் நல அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, 30ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து, சுப்ரீம் கோர்ட், 2014ல் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, 2016, ஜன., 7ல், மத்திய அரசு அரசாணையை வெளியிட்டது. இதை செயல்படுத்த தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில், மாணவர்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, தமிழக அரசு, அவசர சட்டத்தையும், பின்னர் புதியசட்டத்தையும் கொண்டு வந்துஉள்ளது.


கேவியட் மனு தாக்கல்

இதற்கிடையே, சட்ட சிக்கல் ஏற்படாமல் தடுக்க, 2016, ஜன., 7ல் வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசின் சார்பில், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் விண்ணப்பம் அளித்தார்.
தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், தங்களையும் விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசு உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில், 70 கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.இந்நிலையில், தமிழக அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம் உட்பட பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில், நேற்று மனு தாக்கல் செய்துள்ளன.
30ம் தேதி விசாரணை
இவை, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, இது தொடர்பான மனுக்களை தாக்கல் செய்யும்படி, மூத்த வழக்கறிஞர், அபிஷேக் மனு சிங்வி, ஆனந்த் குரோவர் உள்ளிட்டோருக்கு அமர்வு உத்தரவிட்டது.
அரசாணையை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் மற்றும் தமிழக அரசு சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், வரும், 30ல் விசாரிக்கப்படும் என, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.  dinamalar

கருத்துகள் இல்லை: