செவ்வாய், 24 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு போராட்டம் உடைத்தெறிந்த கர்நாடக கம்பளா தடை ! Jallikattu Effect Lifting Ban on Buffalo Race Kambala in Karnataka


மங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டிகளுக்கு தடையை நீக்க வலியுறுத்து வரும் 28-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரேக்ளா பந்தையங்கள், ஜல்லிக்கட்டு என கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெறும். இதற்காகவே காளைகள் சொந்த பிள்ளைகள் போல வளர்க்கப்படும். உச்சநீதிமன்ற தடையால் கடந்த 2 ஆண்டுகள் இந்த போட்டிகள் நடைபெறவில்லை. Karnataka today decided to hold the traditional sport in Mangaluru on January 28 தமிழர்களின் அறவழிப் போராட்டம் உலகம் முழுவதும் பரவியது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, குவைத், சவுதி, சிங்கப்பூர் என பல நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜல்லிக்கட்டு என்ற ஒன்றை வார்த்தைக்காக குரல் கொடுத்தனர்.
இதேபோல் கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய எருது விளையாட்டு கம்பாளா. இந்த எருது பந்தையமானது கரையோர கர்நாடாக மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கிராமங்களில் அந்தந்த கிராம தலைவர்களின் வயல்களில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இந்த கம்பாளா போட்டி நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் இறுதி வரை நடைப்பெறுவது வழக்கம்.

ஆனால் கடந்தாண்டு நவம்பர் 2016ல் இந்த தொடங்க இருந்த இந்த போட்டிக்கு கடந்த 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த பாரம்பரிய விளையாட்டிற்கும் பீட்டா அமைப்புதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கியது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழர்கள் ஒன்று கூடி அறவழியில் போராடி பாரம்பரிய உரிமையை மீட்டு எடுத்து போல், கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்திவரும் "கம்பாளா" போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, வரும் 28-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன  tamiloneindia

கருத்துகள் இல்லை: