ilakkiyainfo.com :பிரான்ஸ் நாட்டில் உள்ள கடற்கரை ஒன்றில்
பெண் அணிந்திருந்த புர்கினி ஆடையை கட்டாயப்படுத்தி நீக்கியதுடன் அவருக்கு
பொலிசார் அபராதமும் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள சில நகரங்களில் இஸ்லாமியர்கள் அணியும் புர்கினி ஆடையை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு முதல் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்து வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டு பிள்ளைகளுக்கு தாயான சியாம் என்பவர் நேற்று நைஸ் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது, இஸ்லாமிய பெண்கள் அணியும் புரிகினி ஆடையை அவர் உடுத்திக்கொண்டு கடற்கரையில் படுத்திருந்துள்ளார்.
சில நிமிடங்களில் அங்கு வந்த 4 பொலிசார் சியாமை எழுப்ப வைத்து அவர் அணிந்திருந்த புர்கினி ஆடையை நீக்க வலியுறுத்தியுள்ளனர்.
சியாம் சில காரணங்களை கூறியபோது பொலிசார்
அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழி இல்லாத காரணத்தினால் அதே இடத்தில்
சியாம் தனது புர்கினி ஆடையை நீக்கியுள்ளார்.
இது மட்டுமில்லாமல், புர்கினி ஆடையை அணிந்த குற்றத்திற்காக அவருக்கு 32 பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது.
பொது இடத்தில் தாயார் ஒருவரிடம் பொலிசார் இவ்வாறு நடந்துக்கொண்டது மனித உரிமை அமைப்புகள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக