சனி, 27 ஆகஸ்ட், 2016

SRM பச்சமுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் ... ஐஜேகே கட்சி தொண்டர்கள் சாலை மறியல்

Pachamuthu bail plea rejection by Saidapet courtசென்னை: மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். குழும தலைவரும் ஐ.ஜே.கே. கட்சி தலைவருமான பச்சமுத்துவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி ரூ.72 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பச்சமுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.


வியாழக்கிழமை மாலை பச்சமுத்து விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
சுமார் 15 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த விசாரணையின் முடிவில் பச்சமுத்து நேற்று மதியம் 12 மணிக்கு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சென்னை ராஜீவ்காந்தி பொது அரசு மருத்துவமனைக்கு மதியம் 3.30 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைகள் முடிந்து மாலை 6.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு, சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து பச்சமுத்து சார்பில் ஜாமின் வழங்ககோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று நிராகரித்த நீதிபதி, பச்சமுத்துவை செப்டம்பர் 9ம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் வரும் 29 ஆம் தேதி ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பச்சமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக பச்சமுத்துவை ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்திற்குள் பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.வெளியே தொண்டர்கள் குவிந்திருந்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னை: பச்சமுத்து சிறை தண்டனை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்பு திரண்டிருந்த ஐஜேகே கட்சி தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி ரூ.72 கோடி மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். குழும் தலைவர் பச்சமுத்து நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட உடனே தமக்கு உடல்நிலை சரியில்லை என போலீசிடம் பச்சமுத்து கூறினார். PMK cadre block road after pachamuthu arrest ராயப்பேட்டை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு நடத்தப்பட்டது. பின்னர், சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று இரவு பச்சமுத்து ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அவரை செப்டம்பர் 9ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அங்கு திரண்ட ஐஜேகே கட்சியினர் பச்சமுத்து சிறை தண்டனை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகம் முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு, பச்சமுத்து கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே, அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read more at:  tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: