திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கேரளா: 65 வயது பெண்ணை நாய்கள் கடித்து குதறி மரணம்

; கேரளாவில் 65 வயது பெண்ணை 50 தெருநய்கள் சேர்ந்து கடித்து கொன்று மக்கள் ஓடிபோய் காப்பாற்றுவதற்குள் பாதி உடலை தின்றே தீர்த்துவிட்டன. அவர் பெயர் சேலுமம்மா. இது நடந்தது எங்கோ கிராமத்தில் அல்ல, திருவனந்தபுரத்தில்
கேரள அரசு நாய்களை கொல்ல முயன்றபோது அறிவில் ஆதவர்கள் (பெடா அமைப்பினர்) களத்தில் குதித்து "சேவ் டாக்ஸ்" என போர்டை பிடித்து போட்டோ எடுத்து இன்டெர்நெட்டில் போட்டு, கோர்ட்டில் கேசையும் போட்டார்கள். ஐம்பது செக்யூர்டீகள் புடைசூழ அம்பாசிடர் காரில் போகும் நீதிபதிகளும் தெருநாய்களை கொல்லகூடாது என தீர்ப்பு கொடுத்துவிடார்கள்.
இப்போது கேரளாவில் வெறிநாய்கள் தொல்லை கட்டுகடங்காமல் போய்கொண்டிருக்கிறது. நாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அவை இனப்பெருக்கம் செய்து, குட்டிபோட்டு பெருகத்தான் செய்யும்.

அவை அதன்பின் குப்பைதொட்டிகளை கிளறி உணவு கிடைக்கவில்லையெனில் இப்படி மக்கள் மேல் பாயத்தான் செய்யும். அவைகளை பொறுத்தவரை அவை ஓநாய் இனம். ஓநாய் இனம் பேக் அனிமல் எனும் வகையில் குழு சேர்ந்து இரையை வேட்டையாடும் இயல்புகள் கொண்டவை. அதனால் நாய்களை நாம் இதில் குற்றம் சொல்ல எதுவும் இல்லை. தன் இன இயல்புப்படி அவை நடந்துகொண்டுள்ளன. கேரளமக்களையும் குற்றம் சொல்ல எதுவுமில்லை. அவர்களும் தன் இன இயல்புப்படி நடந்து கொள்ள முயன்று தடுக்கபட்டார்கள்.
இந்த அறிவில் ஆதவர்கள் தான் மனித இயல்புப்படி நடந்து கொள்வதில்லை. அவர்கள் வேறு ஏதோ கிரகத்தில் வாழும் உயிரினம் போல. அதனால் அவர்களையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் தான் என்ன செய்வார்கள்? காரில் தன் மடியில் அழகான பொமரேனியன் நாய் ஜிம்மியை வைத்து கொண்டு அதற்கு இம்போர்ட்டட்  டாக் ஃபுட் வாங்கி கொடுத்து கொண்டு,போகிறவர்களுக்கு தெருவில் நடந்து போகும் மக்கள் படும்பாடு எப்படி புரியும்?  முகநூல் பதிவு  நெண்டர்

கருத்துகள் இல்லை: