வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு இளம்பெண்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனை அடிப்படையில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, 3 பேரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் ஜாமீன் மீதான தீர்ப்பையும் ஒத்திவைத்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரம் தடை விதித்தது. இருப்பினும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி சசிகலா புஷ்பா ஆகஸ்ட் 29ஆம் நேரில் ஆஜராக வேண்டும்எ ன்றும் உத்தரவிட்டது. நக்கீரன்,இன்


கருத்துகள் இல்லை: