சுவாதி கொலையாளி குறித்த நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏறக்குறைய
கொலையாளியை நெருங்கிவிட்டோம். கொலையாளி விரைவில் பிடிபடுவார் என்று
சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நபரின் புகைப்படத்தை சூளைமேடு மற்றும்
நுங்கம்பாக்கம் பகுதிகளில் வீடு வீடாகக் காட்டி போலீஸார் துப்பு துலக்கி
வருகின்றனர்.
காலை 6.30 மணி அளவில் சுவாதியை கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை
எடுத்துச் சென்ற கொலையாளி காலை 8.15 மணிக்குதான் அதை ‘சுவிட்ச் ஆப்’
செய்துள்ளார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல்போன் சிக்னல்
சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியின் செல்போன் எண்ணை வைத்து
நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. எனவே சுவாதியை கொலை
செய்துவிட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது.
சுவாதி பரனூர் ரயில் நிலையத்தில் இறங்கியே அலுவலகம்
செல்வார். இதனால் அங்குள்ள கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகளையும்
போலீஸார் ஆய்வு செய்தனர். நுங் கம்பாக்கம் கேமராக்களில் பதிவான அதே நபரின்
உருவம், பரனூரிலும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 100-க்கும்
மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் சங்கர் கூறும்போது, "கொலையாளி என்று
சந்தேகிக்கப்படும் நபரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு
அறை எண் 100-க்கு தகவல் தெரிவிக்கலாம்" என்றார். கூடுதல் ஆணையர் சங்கர்
(8939966985), இணை ஆணையர் மனோகரன் (9840962359), துணை ஆணையர் பெருமாள்
(9443481933), உதவி ஆணையர் தேவராஜ் (9840190505) ஆகியோரையும் தொடர்பு
கொண்டு தகவல்களைக் கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலை நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள
கங்கையம்மன் கோயிலுக்கு வந்த சுவாதியை பைக்கில் வந்த ஒரு இளைஞர் வழி
மறித்து தகராறு செய்துள்ளார். அங்கிருந்து சுவாதி வேகமாக சென்று விட்டார்
என்று கோயில் பூசாரி ஒருவரும், பூ விற்கும் பெண்ணும் போலீஸாரிடம்
கூறியுள்ளனர்.
இதற்கிடையில், கொலையாளியின் பெயரைக் குறிப்பிட்டு நடிகர்
ஒய்.ஜி.மகேந்திரனின் முகநூல் பக்கத்தில் தகவல் ஒன்று பகிரப்பட்டது. ஆனால்,
தான் இந்த தகவலை சுயமாக பதிவிடவில்லை என்றும், தனக்கு வந்த தகவலை பகிர
மட்டுமே செய்ததாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஒய்.ஜி.
மகேந்திரன் கூறியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஒய்.ஜி.மகேந்திரன்
மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தடா
ரஹீம் புகார் கொடுத் துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை 11:30 மணி அளவில் தலை மைச் செயலகம் வந்தார்.
அவரை சென்னை பெருநகர காவல் ஆணை யர் டி.கே.ராஜேந்திரன், மாநில உளவுப்
பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். கொலை சம்பவங்கள்
தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் முதல்வர்
கேட்டறிந்தார். பின்னர், மாலையிலும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன்
டி.கே.ராஜேந்திரன் தீவிர ஆலோ சனை நடத்தினார். tamithehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக