2009ஆம்
ஆண்டு இலங்கைப் போரின் முடிவுக்குப் பின்னர், இலங்கைத் தலைவர்கள்
இந்தியாவுக்கு வந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
அதன்பின்னர், அங்கு ராஜபட்சேவின் ஆட்சி முடிந்து மைத்ரிபால சிறிசேன அதிபரான
பின்னர், இந்த எதிர்ப்புகள் மட்டுப்பட்டுப்போன நிலையில் இலங்கை அதிபர்
மைத்ரிபால சிறிசேன திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இன்று சாமி தரிசனம்
செய்துள்ளார். அவருடன் அவரது மனைவி ஜெயந்தி புஷ்பகுமாரி மற்றும் மகன் தஹம்
சிறிசேனா ஆகியோரும் வழிபாடு நடத்தினார்கள். சிறிசேனவின் இந்த வருகை மிக
ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
முன்பு மகிந்த ராஜபக்சாவுக்கும் தடல் புடல் மரியாதை. இப்போ மைத்திரி பால மற்றும் ரணில் விக்கிரமசிங்காக்களுக்கு மரியாதை . எல்லா ஸ்ரீலங்கா தலைவர்களும் திருப்பதி அல்லது குருவாயூர் பக்தியோ பக்தி.. எத்தனை கோவில்கள் இருந்தாலும் இந்த இரண்டு வைணவ தளங்கள்தான் அவர்களது பேவரிட். என்னதான் மர்மமோ?
இது தொடர்பாக, கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சடலவாடா கிருஷ்ணமூர்த்தி, ‘நேற்றிரவு இங்கு வந்த சிறிசேன, ஒரு நாள் இரவு முழுவதும் மலையிலேயே தங்கினார். அவர், தனது குடும்பத்துடன் சுப்ரபாத நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார். இங்கிருந்து அவர் செல்வதற்குமுன், சிறிசேனவுக்கு புனிதமிக்க பட்டுத் துணியும், புனிதநீர் மற்றும் லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டன’ என்றார். கடந்த வருடம் பிப்ரவரி 18ஆம் தேதிக்குப்பின் 2வது முறையாக சிறிசேன இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக