சென்னை
அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணிக் கூட்டம் நடைபெற்றது. திமுக மகளிர்
அணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி.
தலைமையில் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் ஐம்பது விழுக்காடு
மகளிர் இட-ஒதுக்கீடுஅறிவிக்கப்பட்டுள்ளது. இது நமக்கான வாய்ப்பு. மகளிர்
இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது மகளிரணியில்
ஆர்வமுள்ளவர்கள்,வாய்ப்புள்ளவர்கள் லிஸ்ட் கொடுங்க. அனைவரும் தேர்தலுக்கு
இப்போதிருந்தே தயாராக வேண்டும். இந்த ஆட்சியில் பெண்களுக்கு
எதிராகநடந்துவரும் குற்றங்கள் குறித்து பெண்களிடம் எடுத்துச்சொல்ல
வேண்டும். வீடுவீடாக கேன்வாஸ் தொடங்கணும் என, பல்வேறு
வலியுறுத்தல்களைகனிமொழி வழங்கினார். அதன்பின், தமிழகத்தில் மகளிருக்கு
எதிராக நடைபெற்றுவரும் குற்றங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்குப்பின் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆறு ஆண்டுகளாகியும் இதுவரை ராமஜெயம் கொலை வழக்கில்குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகம் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. காவல்துறை மானியகோரிக்கையின்போது திமுக உறுப்பினர்கள் பேரவைக்குள்ளே இருக்கக்கூடாது என்பதற்காகதான், திமுக எம்.எல்.ஏ.க்கள் ‘சஸ்பெண்டு’செய்யப்பட்டுள்ளனர். திமுக உறுப்பினர்களை சட்டப்பேரவைக்குள் வைத்துக்கொண்டு விமர்சனம் செய்திருக்க வேண்டும். மு.க.ஸ்டாலினைபேரவையில் வைத்துக்கொண்டு மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்கு அதிமுக அரசுக்குத் தைரியம் இல்லை.
பேரவைக்கு வந்து பேச கருணாநிதிக்கு துணிச்சல் உண்டா என்றுகூறும் முதல்வர் ஜெயலலிதா, அதற்கான வழிவகைகளைச் செய்தாரா? போதுமானஇருக்கை வசதி செய்துதராமல் சவால் விடுவதில் அர்த்தம் இல்லை என்றார். மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக