மதுராந்தகம் அருகே தனியார் பள்ளி ஒன்று, உரிய குடியுரிமை ஆவணங்கள்
இல்லையென்று கூறி, இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளை பள்ளியிலிருந்து
நீக்கியதால், அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக நியூஸ்
7 இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில்,
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அச்சிறுப்பாக்கத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தின் உதவியால் ஆதரவற்ற மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள இலங்கைத் தமிழர் குழந்தைகள் கல்வி பயின்றுவருகிறார்கள்
இவ்வாறு சுமார் 55 பேர், மதுராந்தகம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்துவருவதாகவும்
இந்நிலையில், சென்டிவாக்கம் மற்றும் அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் 24 மாணவர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அவர்களுக்கு அரசின் உரிய குடியுரிமை ஆவணம் இல்லை என, அந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் காரணம் கூறுகின்றன. இந்நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக, இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளிடம் தொண்டு நிறுவனத்தினர் முறையிட்டுள்ளனர். thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக