தமிழக மக்களோடுதான் நாங்கள் கூட்டணி வைத்து உள்ளோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
முன்னேறவில்லை கோபி சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அந்த கட்சியின் வேட்பாளர் கவுரீஸ்வரனை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சி தான் நடக்கிறது. ஆனாலும் தமிழ்நாடு முன்னேறவில்லை. மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் தமிழ்நாட்டிலோ தெருக்களின் பெயர் தமிழில் இல்லை. இந்த 2 திராவிட கட்சி ஆட்சிகளிலும் ஆற்று மணல் கொள்ளை அடிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் மக்களின் எதிர்காலத்தை நினைத்து மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழன் ஆண்டு இருந்தால் இலங்கையில் போர் நடந்து இருக்குமா? அடேங்கப்பா சந்தடி சாக்கில "தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் தொடங்கிய இந்த கட்சியை நான்"...இப்படி ஒரு பகல் கொள்ளையை தமிழகம் இதுவரை கண்டதில்லை...தம்பி அப்பெல்லாம் நீ பிறக்க கூட இல்லையப்பா...
தலைநகரத்தையே மாற்றுவோம் தி.மு.க. தலைவர் கருணாநிதி கச்சத்தீவை மீட்க போராடுவோம் என பேசி வருகிறார். இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் என்ன பதில் சொல்லப்போகிறார். இலங்கை தமிழர் மீது படுகொலை நடத்திய காங்கிரசும், தி.மு.க.வும் தமிழகத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. எங்களுடைய தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் உண்மையான கதாநாயகன் ஆகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் தலைநகரத்தையே மாற்றுவோம்.
இவ்வாறு சீமான் பேசினார்.
இதில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன், மாநில மகளிர் பாசறை நிர்வாகி அமுதவள்ளி, மேற்கு மண்டல செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்களோடுதான் கூட்டணி இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாம் தமிழர் கட்சியானது பணத்தை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. இளைஞர்களை நம்பித்தான் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இதற்கான விடை மே 19–ல் தெரியும். தமிழ்நாட்டில் எல்லா தொகுதிகளிலும் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. இதுபோல் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம்.
நாங்கள் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. 8 கோடி தமிழக மக்களோடுதான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். தே.மு.தி.க.வில் இருந்து பிரிந்து வந்த சந்திரகுமாருக்கும், மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து உள்ள ஜி.கே.வாசனுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள். பதவி எங்கு கிடைக்குமோ அங்குபோய் இவர்கள் சேர்ந்து உள்ளனர்.
காமராஜர் ஆட்சி காலத்தில் ஊழல் இல்லை. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் ஊழல் பெருகிவிட்டது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தொடங்கிய இந்த கட்சியை நான் தற்போது நடத்தி வருகிறேன். தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 41 இடங்களிலும் தி.மு.க.வினர் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் பவானி அந்தியூர் பிரிவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பவானி சட்டசபை தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமியையும், அந்தியூர் தேரடி திடலில் நடந்த கூட்டத்தில் அந்தியூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் மணிமேகலையையும், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பவானிசாகர் சட்டசபை தொகுதி வேட்பாளர் சங்கீதாவையும் ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார் dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக