அதிமுக உடன்
கூட்டணி வைக்கவே ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்
தொண்டர்கள் விரும்பினார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவர்
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.சமீபத்தில் திமுக உடன் கூட்டணி அமைக்காமல்
மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததற்கு தேமுதிகவில் பல நிர்வாகிகள்
அதிருப்தி தெரிவித்து தனி கட்சியை ஆரம்பித்தார்கள்.;தமாகாவின் ஜி.கே.வாசன் அதிமுக உடன் கூட்டணி
பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, பின்னர் அதில் உடன்பாடு ஏற்படாமல், அவரும்
மக்கள் நல கூட்டணியுடன் ஐக்கியம் ஆகிவிட்டார்.
இவரின் இந்த முடிவுக்கும் கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே பீட்டர் அல்போன்ஸ் தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமனியன் கூறும் போது தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக ஜி.கே.வாசன் முடிவெடுத்துள்ளதாக கூறினார்.இது குறித்து கூறிய அவர், அதிமுக உடன் கூட்டணி அமைக்கவே தமாகாவின் 90 சதவீத தொண்டர்கள் விரும்பினார்கள். ஆனால் ஜி.கே.வாசன் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுத்ததாக குற்றம்சாட்டினார் வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக