செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ஜெயா கூட்டத்தில் வெயில் வெளியேற முயற்சி 2 பேர் பலி...17 பேர் மருத்துவமனையில்...

விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரத்துக்காக பல மணி நேரம் வெட்ட வெளியில் காத்திருந்த பெண்கள் வெயில் தாங்காமல் வெளியேற முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர். மயக்கம் அடைந்த பெண்கள் உள்பட மேலும் 17 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 13 அதிமுக  வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் விருத்தாசலம்- சேலம் சாலையில் உள்ள அழிச்சிக்குடியில் நேற்று நடந்தது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.  இதான் சொன்னதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன்கிறது

இந்த கூட்டத்துக்காக காலை 11 மணிக்கெல்லாம் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். பலர் வெயிலின் கொடுமை தாங்காமல் வழிநெடுக  வைக்கப்பட்டிருந்த பேனரை கழற்றி குடையாக பயன்படுத்தினர். பெண்கள் வெயிலின் கொடுமை தாங்காமல் மிகவும் அவதிக்குள்ளாகினர். தங்கள் சேலை முந்தானையால் தலையை மூடியிருந்தவர்கள், நேரம் ஆக, ஆக வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் இருக்கைகளை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது அதிமுகவினர் அவர்களை கட்டாயப்படுத்தி உட்கார வைத்தனர். ஜெயலலிதா மதியம் 2.30 மணிக்கு ஹெலிகாப்டரில்  வந்திறங்கினார். 3 மணிக்கு மேடை ஏறிய ஜெயலலிதா வேட்பாளர்களை அறிமுகம்  செய்து வைத்து பேச தொடங்கினார்.

அப்போது, வெயில் தாங்காமல் பலர் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் இருக்கும் பகுதிக்குள்ளும் ஆண்கள் புகுந்ததால் கைகலப்பு ஏற்பட்டது. சேர்கள் உடைந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 19 பேர் மயக்கமடைந்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அங்கு வந்தனர். இந்த களேபரம் எதையும் கவனிக்காமல் தொடர்ந்து ஜெயலலிதா பேசிக்கொண்டு இருந்தார். இதனால் மயங்கி கிடந்தவர்களை மீட்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது. ஜெயலலிதா பேசி முடித்துவிட்டு காரில் ஏறி ஹெலிகாப்டர் தளத்துக்கு புறப்பட்ட பிறகே மயங்கி கிடந்த 19 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிதம்பரம் 31வது வட்டம் தெற்கு வாணியதெருவை சேர்ந்த அதிமுக உறுப்பினர் கருணாகரன்(61) என்பவர் உள்பட சிலரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கருணாகரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் பெண் காவலர் விஜயசாந்தி, ஜெயங்கொண்டம் ராதாகிருஷ்ணன் (42) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் இறந்தார். இறந்த கருணாகரனின் செல்போனில் இருந்து அவரது மனைவி மலர்கொடியிடம் காவல்துறையினர் பேசினர். விருத்தாசலம் மருத்துவமனையில் இருக்கிறார். கடலூர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என போலீசார் அலைக்கழித்தனர். இறுதியில் அவர் இறந்ததை அறிந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் பெண்கள் உள்பட 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தினகரன்.கம

கருத்துகள் இல்லை: