வெள்ளி, 15 ஏப்ரல், 2016

தெறி படத்துக்கு விநியோகஸ்தர்கள் உள்ளடி..60 தியேட்டர்கள் முடக்கம்...செங்கல்பட்டில்....மாபியா?


சென்னை,ஏப்.15 (டி.என்.எஸ்) விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘தெறி’ படம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் வெளியாகவில்லை. குறிப்பாக செங்கல்பட்டு பகுதியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகததால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர் தாணு, செங்கல்பட்டு பகுதிகளில் படம் வெளியாவததால் தனக்கு பல கோடி நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய தாணு, “தெறி படம் செங்கல்பட்டு பகுதியில் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் மூலம் செங்கல்பட்டு பகுதிக்கு ரிரீஸ் செய்ய கொடுத்திருந்தோம். அவர்களும் சரியான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அப்படியிருக்கும்போது சுமார் 75 சதவீத தியேட்டர்களில் (சுமார் 60 தியேட்டர்கள்) படம் வெளியாகவில்லை. விநியோகஸ்தர்கள் எதையோ எதிர்பார்த்து இப்படி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே செங்கல்பட்டு பகுதியில் பிரச்சனை இருந்தது. இப்போது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டனர். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
‘தெறி’ படத்தை திரையிடாத திரையரங்குகளில், சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள ‘24’ உள்ளிட்ட எந்த படங்களையும் இனி ரிலீஸ் செய்யப்போவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு பகுதிகளில் ‘தெறி’ படத்தை திரையிடதாதற்குகான காரணம் குறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், இன்று நிருபர்களுக்கு விளக்கம் அளிப்பதாக அறிவித்துள்ளார். chennaionline,com

கருத்துகள் இல்லை: