அ.தி.மு.க., - தி.மு.க., மதுவிலக்கு
அறிவிப்புக்கு நான் தான் காரணம்: நிதிஷ்
பாட்னா: ''பீஹாரில் அமல்படுத்தப்ட்ட பூரண மதுவிலக்கு, மிக விரைவாக
தமிழகத்திலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க.,
உள்ளிட்ட கட்சிகள், மதுவிலக்கை, தங்களுடைய தேர்தல் வாக்குறுதியாக
அறிவித்துள்ளன,'' என, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய
ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு உள்ளது.
மாநிலத்தில், கடந்த வாரம்,பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார் நிதிஷ்குமார்.பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:பீஹாரில்
மதுவிலக்கு வந்ததால், தங்களுடைய மது விற்பனை அதிகரித்துள்ளதாக, நம் அண்டை
மாநிலங்கள் மகிழ்ச்சியில் உள்ளன
இது, நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.தமிழகத்தில்நடக்கும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. பீஹாரின் முயற்சி, மிக வேகமாக தமிழகம் வரை பரவியுள்ளது. நம் அண்டை மாநிலங்களான, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்திலும், விரைவில், மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைப்பர்.
இவ்வாறு அவர் பேசினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக