கேரளாவில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் விமானப்படை மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.
கொல்லம்
அருகே பராவூரில் தேவி கோவிலில் அதிகாலை 3 மணியளவில் திருவிழாவின் போது
பட்டாசு வெடிக்கப்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்து
விழுந்தது. விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து உள்ளது. சுமார்
350க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் கொல்லம்,
திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருடைய
நிலையானது கவலைக்கிடமாக உள்ளது.
Read more at: ://tamil.oneindia.com
தீ விபத்து
ஏற்பட்ட பகுதியில் விமானப்படையும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.
விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பிற
பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூரில் உள்ள
விமானப்படை தளத்தில் உள்ள Mi-17 &ALH இரண்டு ஹெலிகாப்டர்கள் உள்பட 4
ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில்
கேரளா மாநில போலீஸ், பேரிடர் மேலாண்மை படை மற்றும் தீயணைப்பு படை மீட்பு
மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.
தேசிய
பேரிடர் மேலாண்மை படையின் டி.ஜி. பேசுகையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட
பகுதிக்கு சாத்தியாமான உதவிகளை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம்
உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் 4 தேசிய பேரிடர் மேலாண்மை குழு நிறுத்தி
வைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து
சென்னையில் இருந்து 4 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் கேரளா விரைந்தது.
விபத்து
தொடர்பாக தகவல் தெரிந்துக் கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது... 0474
2512344, 9497960778, 9497930869 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு
கொள்ளலாம்...
திருவனந்தபுரம்: கேரள கோவில் தீவிபத்தில் சிக்கியவர்கள் பற்றிய
விபரங்களைத் தெரிந்து கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவில்
திருவிழாவில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வானவேடிக்கையால்
இந்த விபத்து நடந்துள்ளது. இதில், கோவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில்
இடிபாடுகளில் சிக்கியும், தீவிபத்தில் காயமடைந்தும் திருவிழாவிற்கு
வந்திருந்த 90 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Kerala fire accident: Helpline numbers announced
காயமடைந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருவனந்தபுரம், கொல்லம் அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது
நிலைமை மோசமாக இருப்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என
அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்கள் பற்றிய விபரங்களைப் பெற 0474 -
2512324, 949760778, 949730869 என்ற உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.Read more at: ://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக