புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக விரும்புகிறது.
இது குறித்து, புதுச்சேரியில் பாமக செய்தித் தொடர்பாளர் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக விரும்புகிறது.ஒரு வேளை, அந்தக் கூட்டணி அமைப்பதற்கான
வாய்ப்பு குறைந்து போனால் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளோம். கூட்டணி
அமைத்துப் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது
முடிவானதும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.இதற்கேற்ப, மாஹி, ஏனாம் ஆகிய இரண்டு தொகுதிகள் தவிர்த்து, மற்ற 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கட்சி தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் வெப்துனியா.கம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக