செவ்வாய், 12 ஏப்ரல், 2016

பாஜகவின் சாதி மத கூட்டணியில் ஐ.ஜே.கே.,வுக்கு 45 தொகுதிகள்.. தேவநாதன் கட்சிக்கு 24 தொகுதிகள்

சென்னை: பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே., இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜ பொறுப்பாளர் முரளிதர்ராவ், அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், பொது செயலாளர் மோகன்ராஜூலு கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. IJK to contest on 45 seats after seat sharing with bjp இதில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகளும், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு 24 தொகுதிகளும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டனர். ஐ.ஜே.கே. கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1. கோவில்பட்டி 2.மதுரை வடக்கு 3.நத்தம் 4.வேடசந்தூர் 5.திருப்பத்தூர் (சிவகங்கை) 6.சிவகங்கை 7.விராலிமலை 8.புதுக்கோட்டை 9.ஆலங்குடி 10.அறந்தாங்கி 11.திருச்சி மேற்கு 12.லால்குடி 13.முசிறி 14.துறையூர் (தனி) 15.அரவக்குறிச்சி 16.குன்னம் 17.அரியலூர் 18.திருவையாறு 19.நன்னிலம் 20.பூம்புகார் 21.திட்டக்குடி (தனி) 22.விருத்தாச்சலம் 23. நெய்வேலி 24..மயிலம் 25.உளுந்தூர்பேட்டை 26.ரிஷிவந்தியம் 27.சங்கராபுரம் 28.கள்ளக்குறிச்சி (தனி) 29.செங்கல்பட்டு 30.மதுராந்தகம் (தனி) 31.திரு.வி.க.நகர் (தனி) 32.மதுரவாயல் 33.காட்பாடி 34.குடியாத்தம் (தனி) 35.கலசபாக்கம் 36.வந்தவாசி (தனி) 37.கிருஷ்ணகிரி 38.பாலக்கோடு 39.பாப்பிரெட்டிபட்டி 40.சேலம் மேற்கு 41.ஆத்தூர் (தனி) 42.ஓமலூர் 43.எடப்பாடி 44.வீரபாண்டி 45.சேந்தமங்கலம் (தனி)

Read more at: //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: