வெளிநாட்டிற்கு ஹவுஸ் டிரைவர் வேலைக்கு மட்டும் வந்துராதிங்க நண்பர்களே
மன வலி உங்கள் கோபத்தை கூட உங்களால் வெளிபடுத்த முடியாது நம்மால் சுயமாக
ஏதும் செய்ய முடியாது உடம்பில் உள்ள நரம்பு வெடிக்கும் அளவிற்கு நமக்கு
கோபம் வரும் ஆனால் நம்மால் ஏதும் செய்ய முடியாது ஒரு துரும்பை கூட உங்கள்
கபில் அனுமதி இல்லாமல் உங்கலால் அசைக்க முடியாது சுயமாக ஏதும் உங்களால்
செய்ய முடியாது ( வேலை க்கு ஏற்ற ஊதியம் இல்லை என்றால் EXIT ல் சென்று
விடுங்கள் இளமையை
இங்கு வீணடிக்காதீர்கள் சொற்ப சம்பளத்திற்காக )
பெருபாலும் எனக்கு வரும் போன் கால் உதவி கேட்டு வருபவர்கள் என்னை
இன்பாக்ஸில் தொடர்பு கொள்பவர்கள் பெரும்பாலும் பல பிரச்சனைகளுக்கு ஆளாவது
ஹவுஸ் டிரைவர்கலாகத்தான் இருகிறார்கள் என்னால் முடிந்த
உதவிகளை செய்கிறேன் மற்றும் ஆலோசனைகளை வழங்கி கொண்டு தான் இருக்கிறேன்
ஒருத்தர் இரண்டு பேராக இருந்தால் உதவி விடலாம் ஒரு நாளைக்கு பலர் எனக்கு
இன்பாக்ஸில் மெசேஜ் செய்கிறார்கள்
அவர்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவ முயற்சி செய்கிறேன் இன்னும் பல இன்பாக்ஸ் மெசேஜ்கல் என்னால் படிக்க முடியாமல் நேரம் இல்லாமல் ஓபன் பண்ணாமலே உள்ளது என்னுடைய வேலைகளின் காரணமாக இன்னும் எத்தனை பேர் நம் கண்ணுக்கு தெரியாமல் கஷ்ட பட்டு கொண்டு இருகிறார்கள்
அவர்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவ முயற்சி செய்கிறேன் இன்னும் பல இன்பாக்ஸ் மெசேஜ்கல் என்னால் படிக்க முடியாமல் நேரம் இல்லாமல் ஓபன் பண்ணாமலே உள்ளது என்னுடைய வேலைகளின் காரணமாக இன்னும் எத்தனை பேர் நம் கண்ணுக்கு தெரியாமல் கஷ்ட பட்டு கொண்டு இருகிறார்கள்
என தெரிய வில்லை நெஞ்சம் கனக்கிறது கவலையாக உள்ளது அவர்களுகாகதான் இந்த போஸ்ட் போட்டுளேன் )
வெளிநாட்டு வாழ்க்கை ஹவுஸ் டிரைவர்களின் சொல்ல
முடியாத சோகம் தனிமையின் கொடுமை .....
ரொம்ப நாளா இவங்கள பத்தி ஒரு பதிவு எழுதனுமுன்னு நினைத்தேன் .இப்பொழுது
தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது .பொதுவாக எல்லா வேலையிலும் ஒரு கஷ்டம்
இருக்கும் ஆனால் கஷ்டத்தோடு சேர்த்து சங்கடமும் உள்ள வேலைதான் இந்த ஹவுஸ்
டிரைவர் வேலை அவர்கள் வீட்டை உங்களை கூட்ட பெருக்க கூட சொல்வார்கள் தோட்ட
வேலை கூட செய்ய வேண்டும்
1- அவர்களுக்கான சாப்பாட்டு நேரத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது அதை அவர்கள் வீட்டு முதலாளிதான் தீர்மானிக்க வேண்டும் .
2-கவலையை மறந்து நிம்மதியாக தூங்க முடியாது எந்த நேரத்தில் முதலாளி கூப்பிட்டாலும் செல்ல வேண்டும் .
3- ரம்ஜானும் ,பக்ரீத்தும் வரும்போது நம்ம எல்லாம் நம்ம நண்பர்கள் ரூம்ல
போய் பல விதமான சாப்பாடு சாப்ட்டு அங்க அரட்டை அடுச்சு அன்றைய தினத்தை
கழிப்போம் ஆனால் அவர்களுக்கு அன்றைய தினம்தான் அதிக வேலை இருக்கும் .
4-அவர்களுக்காக குடுக்கப்பட்ட படுக்கைஅறையின் அளவோ மிகச்சிறியது
அதற்குள்ளே கிச்சனும் ,பாத்ரூமும் ,அடங்கிவிடும் 3பேர் சேர்ந்து உக்காந்து
சாப்பிட கூட முடியாது .
5-ஊரில் எந்த பிரச்சினை இருந்தாலும் அவர்களுக்கான விடுமுறை மாதம் இங்கு மதரசா (பள்ளிகூடங்கள் )விடுமுறை விடும் மாதங்கள் மட்டுமே .
6-நமக்கு எதுவும் மனக்கஷ்டம் வந்தால் நமக்கு அதை உடனே மற்றவர்களிடம்
பறிமாற சந்தர்ப்பம் உண்டு ஆனால் அவர்கள் சங்கடம் வந்தாலும் ,சந்தோஷம்
வந்தாலும் தானே சிரித்து, தானே சங்கடபட வேண்டும் .
7-அவர்களுக்கு கிடைக்கும் அந்த 2மாத விடுமுறை கொண்டு குடும்பத்தாரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் .
8-எவ்வளவு தான் பட்ஜெட் போட்டுபணத்த சேமிச்சு வச்சாலும் ஊருக்கு போகும் போது நண்பர்கள் கிட்ட கடன் வாங்கிட்டு போறது குறைந்த சம்பளம்
9- 25வயசுல வேலைக்கு வந்து தனது ஆயுளை (50வயசுவரை) கழிப்பவர்
10-அவர்கள் ஓட்டும் கார்களின் நிறங்களும் ,உருவங்களும் மாறிக்கொண்டே
இருக்கும் ...ஆனால் பலரின் வாழ்க்கைத்தரம் மாறுவதே இல்லை .இன்னும் பல......
11 - அதிகமாக பகலில் தூக்கம் இரவில் வேலையாக தான் இருக்கும்
12 - சாபிங் மால் சென்றால் கார் பார்கிங்கில் காத்து கிடக்க வேண்டும் பல மணி நேரங்கள்
13 - உங்க கைல கார் இருக்கும் கார் சாவி இருக்கும் அனால் நீங்கள் தேவை க்கு பயன் படுத்த முடியாது
14- சிறைச்சாலை போன்ற வாழ்க்கை தான் இந்த ஹவுஸ் டிரைவர் வாழ்க்கை
அவர்கள் வீட்டை உங்களை கூட்ட பெருக்க கூட சொல்வார்கள் தோட்ட வேலை கூட செய்ய
வேண்டும்
15- உங்கள் அரபி முதலாளி கபில் அனுமதி இல்லாமல் ஒரு துரும்பை கூட உங்களால் அசைக்க முடியாது
16 - குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்பட்டால் கூட பெற்ற தாய் முகத்தையோ தந்தை முகத்தை கூட பார்க்க உங்களால் முடியாது
எல்லாம் முடிந்த பிறகு மூன்றாவது வேற்று மனிதரை போன்று ஒரு வாரம் கழித்து சென்று தான் நலம்விசாரிக்க செல்ல முடியும்
17 - நீங்க தூங்கிகிட்டு இருந்தாலும் நாடு ராத்திரில ஒரு ரியால்
குப்பூஸ்க்காக இருபது கிலோ மீட்டர் கூட போக சொல்லு வாங்க நீங்க கோப படாம
போகித்தான் ஆகணும் ஒரு ஆண் ஆணாக கம்பிரமாக வாழ முடியாது ஒரு கோழையை போல்
தான் வாழ வேண்டும்
18- ஒரு சில இடங்களில் 1500 ரியால் சம்பளம் ஒரு நாளைக்கு வேலை மட்டும்
18 மணி நேரம்.வேலை புடிக்கல ஊருக்கு போறன்னு சொன்னா 5000 ரியால் கேப்பாங்க
அதை குடுக்காம நீங்க எங்கயும் போக முடியாது பாஸ்போர்ட் உங்க கபில் கைல தான்
இருக்கும் நம்ம ஊர்ல மாதிரி போராட்டம் ஆர்பாட்டாம்லா இங்க பண்ண முடியாது
நமக்கு தெரிஞ்ச அரபி ய வச்சி யாரையும் சமாளிக்கவும் முடியாது போலிஸ்
ஸ்டேசனும் போக முடியாது எல்லா ரோ ஜீப் கபீல்னு சொல்லிருவான் ஒரே வார்த்தைல
போலிஸ் ஸ்டேஷன்ல
இன்னும் வேறு சில இடங்கள்ள சம்பளமோ 1200 ரியால் போன் செலவு சாப்பாட்டு
செலவு என மாதம் 400 ரியால் அதில் போய் விடும் மீதம் இருபதோ 800 ரியல் ஊர்
காசிற்கு வெறும் 14000 ரூபாய் தான் மிஞ்சும் இதை வைத்து என்ன
செய்ய முடியும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து இளமையை இங்கேகழித்து
இளமையை வீனடிகாதீர்கள் நம் நாட்டிலே டிரைவர்களுக்கு குறைந்தது இருபதாயிரம்
வரை சம்பாதிக்கலாம் சொற்ப சம்பளத்தில் வேலை செய்து வாழ்க்கையை வீணடிக்க
வேண்டாம்.
நல்ல சம்பளம் நல்ல கபில் என்றால் வேலை பாருங்கள் இல்லை என்றால்
அக்ரீமன்ட் முடிந்த உடன் ஊரை பார்த்து போய் கொண்டே இருங்கள் மனைவி
பிள்ளைகளுடன் சந்தோசமாக இருங்கள் நண்பர்களே இதுதான் ஹவுஸ் டிரைவர்களின்
நிலைமை தனிமையின் கொடுமை வேலையோ கடுமை ....
உண்மை என்றால் ஷேர் செய்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
(குறிப்பு - நான் எல்லோரையும் குறிப்பிட வில்லை நல்ல அரேபியர்களும்
இருக்கதான் செய்கிறார்கள் சிலர் நல்லவர்களிடம் சந்தோசமாக இருகிறார்கள்
சிலர் கரடு முரடானவர்களிடம் மாட்டி கொள்கிறார்கள் எல்லோருக்கும் இறைவன்
சந்தோசமான நிம்மதியான வாழ்க்கை தருவானாக ஆமீன் )
சவுதியில் இருந்து
Mohamed Safiyullah முகப்புத்தகதினூடாக இவரை தொடர்பு கொள்ள கிலிக் செய்யுங்கள்
- See more at: anuradhapuranews.com/2016/04/blog-post_85.html#sthash.Xd3ImSjP.dpuf
- See more at: anuradhapuranews.com/2016/04/blog-post_85.html#sthash.Xd3ImSjP.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக