வெள்ளி, 15 ஏப்ரல், 2016

மோடி அரசுக்கு கி.வீரமணி எச்சரிக்கை: வெளியுறவுக் கொள்கையில் சிக்கல் வரும்..பாரத் மாதாக்கி ...

பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்தை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கட்டளையிட்டுள்ளதோடு. பக்கத்து நாடுகள் பற்றியும் தெரிவித்துள்ள  கருத்து, வெளியுறவுக் கொள்கையில் மோடி அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
;இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தற்போது மத்தியில் உள்ள ஆட்சியைப் பலமாகப் பிடித்துள்ள பா.ஜ.க. அதனை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் அனைவரும், ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்’ என்ற எண்ணத்துடன் அவசரக் கோலத்தை அள்ளித் தெளிக்கும் நிலையில் ‘Now or Never’ என்கிற முடிவில் தம் விருப்பங்களையெல்லாம் தீர்த்துக் கொள்ள நடைமுறைப்படுத்திட, ‘ஹிந்துத்துவ சாம்ராஜ்யத்தை’ நிறுவ துடியாய் துடிக்கிறார்கள்!


தந்தை பெரியார் கூறும் உதாரணம் போல், நெருப்பில் நிற்பவனுக்கு வேட்டி அவிழ்ந்தது கூட கவனிக்க முடியாத பரபரப்பு என்பார்; அதுபோன்ற அவசரத்தில், ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக் கொள்ளுகிறார்கள்.அம்பேத்கர் முகமூடி அணியும் தந்திரம்<இதற்குச் சரியான எடுத்துக்காட்டு - பீகார் தேர்தலில் பெற்ற பெரு தோல்வி - மூக்குடைப்பு - அதன்பின் அம்பேத்கரிடம் சரணாகதி அடைந்து, அவரையே தங்கள் முகமூடியாக்கிக் கொண்டு அம்பேத்கர் ‘நாமாவளி’ என்ற உதட்டு முழக்கத்தின் மூலம் தங்களுக்கு உரமேற்றிக் கொள்ளும். உலகத்தினை ஏமாற்றும் முயற்சி!</span><div style=" text-align:="" /> ‘பாரத மாதா கி ஜே’ என்னும் புதிய கோஷம்

சமூகநீதி என்ற மின் வயரில் கையை வைத்துப் பெற்ற மின்சார ‘ஷாக்’ ஆர்.எஸ்.எசுக்கு இன்னமும் தீராத நிலையில், இப்போது புதிய கோஷம் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லக் கட்டாயப்படுத்தும் அதி தீவிர 24 கேரட் தேச பக்தி!

வங்கத்தைப் பிடிக்க ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அங்கே சென்று, தனது ‘பாரத் மாதா கி ஜே’ முழக்கமிட்டு, ஒரு புதிய விளக்கம் என்ற பெயரில் மிகப் பெரிய தர்ம சங்கடத்தை பிரதமர் மோடி அரசுக்கு ஏற்படுத்தியுள்ளார்!

‘Those who did not Believe in Bharat Created Pak: Bhagwat’
(- ‘The Economic times’ 28.3.2016 page 5)

பாரதத்தின் (ஹிந்துத்துவ) தனித் தன்மைகளை விரும்பாதவர்கள் தான் இப்படி ஏற்கெனவே ஒரு தனி நாட்டை (பாகிஸ்தானை) உருவாக்கினார்கள்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் என்ன கூறுகிறார்?

மலைவாழ் மக்கள் (ஆதி வாசிகள் என்றே ஆர்.எஸ்.எஸ். நாமகரணம் சூட்டப்பட்ட அமைப்பு) (Tribal Society) என்ற ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பின் கூட்டத்தில் கொல்கத்தாவில் பேசும்போது இப்படிக் கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்; அது மட்டுமா?

“எங்கே தனிக் குணம் இருக்கிறதோ அது தான் ‘பாரத்’ ஆகிறது! இத்தன்மையை விரும்பாதவர்கள் தனி நாட்டை உருவாக்கி விட்டார்கள்.

அங்கேதான் நமது வேதங்கள் எழுதப்பட்டன.

தேவபாஷையான சமஸ்கிருதம் அங்கேதான் (பாகிஸ்தானில்) பிறந்தது!

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதை பிரிக்கச் சொல்லி, நம் பாரதப் பெயரை விட்டு, வேறு பெயரையும் சூட்டி விட்டார்கள்!

நாம் பாரத்வாசிகள், நமது தனிக் குணங்களான ஹிந்து பாரம்பரியமுறை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட வேண்டியது, நாம் கடமையாற்ற வேண்டியுள்ளது!

எனவே, ஆர்.எஸ்.எஸ்.கார்கள் அனைவரும் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷத்தை நாடு முழுவதும் பரப்பியாக வேண்டும்” என்று கட்டளை இட்டுள்ளார்!

அண்டை நாடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வரப் போகிறார்களா?

அவர் எங்கே வருகிறார்  - இதன் மூலம்? ‘அகண்ட பாரதம்’ என்று காந்தியாரைக் கொன்ற கோட்சேயின் கூற்றை ஒவ்வொரு ஆண்டும் அவனது நினைவு நாளில் புதுப்பித்து, மீண்டும் தனி நாடுகளாக ஆகி விட்ட பக்கத்து நாடுகளையும் ஒரு குடைக்குக் கீழே கொண்டு வந்தாக வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லுகிறார்.

சர்வதேச அரங்கில் பக்கத்து நாடுகளின் வெளியுறவில் இதன் பாரதூர விளைவுகள் எப்படி இருக்கும்?
மோடி அரசுக்கு நெருக்கடி!

இதன் மூலம் மோடி அரசையே மிகவும் நெருக்கி ஒரு இக்கட்டான நிலைக்குத்  தள்ளாதா?

முன்பு ‘ஜின்னாவை பாராட்டினார்’ என்ற குற்றச்சாற்று மூலம் அத்வானியை ஒதுக்கி வைக்க செய்த முயற்சியைப் போன்ற  அடுத்த கட்டம் இது!

எல்லைப்புற மாநிலங்களில் - காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை ஊரறிந்த உண்மை!

பதவி ஏற்பு விழாவில் அண்டை நாடு பிரதமர்களை மோடி அழைத்தது ஏன்?

எனவே ‘பாரத மாதா கி ஜே’ என்பதன் மூலம் பேராபத்தான நச்சரவத்தின் நஞ்சு உள்ளே நுழைந்திருக்கிறது.
அண்டை நாடுகளின் தலைவர்களையெல்லாம் தன் பதவியேற்புக்கு அழைத்து, அதன் மூலம் உலக நட்புறவுக்கு நற்பலனை ஏற்படுத்தும், நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பும்  கிடைக்கும் என்று கூறிய பிரதமர் மோடிக்கே மோகன் பகவத்தின் பேச்சு மறைமுகமான நெருக்கடியை  உருவாக்குகிறது.

வெள்ளைக்காரன் வருவதற்குமுன்  ‘இந்தியா’ என்ற ஒன்று இருந்ததா?

அகண்ட பாரதம்கோரும் ஆர்.எஸ்.எஸ். முதலில் இந்தியாவே வெள்ளைக்காரன் வருவதற்குமுன் ஒரே ‘தேசமாக’ இருந்ததுண்டா?

இதற்கு ஆதாரம் வேறு எங்கும் போக வேண்டாம். ஹிந்து பாரம்பரியத்தின் மூலநூல்களில் ஒன்றான மனுதர்ம சாஸ்திரத்தின் சுலோகத்தைப் பார்த்தால் போதுமே; 

‘‘10ஆம் அத்தியாயம்: 

43. பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத்தன்மையை யடைந்தார்கள்.

44. பௌண்டாம், ஒளண்டாம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை யாண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள்.

45. உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும் சங்கரசாதியிற்  பிறந்தவர்களில் சிலர் மிலேச்சபாஷையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள். ஆகிலும் அனைவரும் தஸ்யூக்களென்று (திருடர்கள்) சொல்லப்படுவார்கள்.”

44ஆம் சுலோகம் திராவிடம் உட்பட பல தேசங்கள் இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளதே.
 ஆர்.எஸ்.எஸ். பதில் கூறுமா?

‘பாரத மாதா கி ஜே’ மறைமுக ஆக்கிரமிப்பு கோஷமா? என்று உலகத்தார் கேட்கமாட்டார்களா?

நன்றி:nakkheeran,in

கருத்துகள் இல்லை: