மாமண்டூரில் நேற்று நடந்த மாநாடு ஒரு பெரிய உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது .எப்பொழுதெல்லாம் திருமாவளவனின் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் எழும் உற்சாக குரல் கூட்டணி தலைவர்களை திகிலில் ஆழ்த்தியதை காணக்கூடியதாக இருந்தது. நிச்சயம் விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது. மிகவும் ஆச்சரியமாக விஜயகாந்தின் பெயர் உச்சரிக்கும் பொழுதெல்லாம் வழமையாக காணப்படும் உற்சாக முழக்கம் மிஸ்ஸிங்...அந்த கடையும் காலியாவதை காணக்கூடியதாக இருந்தது .
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகாவின் தேர்தல் சிறப்பு மாநாடு சென்னையை அடுத்த மாமண்டூரில் இன்று இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வைகோ, விஜயகாந்த், ஜி.கே.வாசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகிய 6 கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான 6 கட்சித்தொண்டர்களும் குவிந்தனர்.இம்மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது,’இன்றைக்கு வெளியே சென்று பேசக்கூடியவர்கள் இத்தனை நாளும் அண்ணி.. அண்ணி என்னுடன்தான் இருந்தார்கள். இவ்வளவு பெரிய மனக்குறையை வைத்துக்கொண்டு எப்படி கொஞ்சம் கூட கூசாமல் என்னுடன் அண்ணி என்று எப்படி பழகினீர்கள்? உட்கட்சி ஜனநாயகம் இல்லாத அமைப்புக்கள் எல்லாவற்றிலும் இந்த பிரச்னை இருக்கவே செய்யும் என்பது எந்த குழந்தைக்கும் கூட புரியும்...உங்களுக்குள் அது தெரியும் ஆனா என்ன இப்ப ஒன்னும் தெரியாத பாப்பா வேஷம் போடுறீங்க.....நீங்களும் உங்க கூட்டணியில் இருக்கிற எல்லா கட்சிகளும் விடுதலை சிறுத்தைகளின் தொண்டர் பலத்தில் குளிர் காய்கிறீர்கள்....
அவர்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது என்னுடைய தலையாய கடமையாக கருதுகிறேன். யார் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு பேசுகிறீர்கள் என்பது தெரியும்.
;நானும் கேப்டனும் ஜெயலலிதாவிடம் பல ஆயிரம் கோடி வாங்கிக்கொண்டு மக்கள் நலக்கூட்ட ணியில் இணைந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். கேப்டனோ, நானோ, கழகத்தினரோ கோடிகளுக்கு அடிபணியமாட்டோம். கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில்தான் இடம் பிடிப்போம்
தேமுதிக கேப்டன் கட்டுப்பாட்டில் இல்லை. எங்கள் அண்ணி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சொன்ன அவருக்கு நான் சொல்கிறேன். நான் என் அன்புக்கனவர் கேப்டன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறேன். நானே கேப்டன் கட்டுப்பாட்டில் இருக்கும்போது; கட்சி எப்படி என் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற பெரும் கேள்விக்குறியை உங்கள் முன்னாடி வைக்கிறேன். என் உயிர் இருக்கும் கடைசி நிமிடம் வரை கட்சிக்காகத்தான் இந்த வாழ்வேன்.
இவர்கள் சொல்வதுபோல காசுக்கோ பணத்துக்கோ அடிபணியமாட்டேன். எனக்கு என் மகன் எப்படியோ அதே போலத்தான் கடைக்கோடியில் இருக்கும் கழக தொண்டனும் எனக்கு ஒன்றுதான். கேப்டனுக்கும் அதுபோலத்தான். உங்கள் எல்லோரும் நான் ஒன்று சொல்கிறேன். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்’’என்று கூறினார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக