சனி, 16 ஏப்ரல், 2016

நீதித்துறையின் செயல்பாடுகள் சரியாக இல்லை ! குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அதிருப்தி

Judicial activism should not lead to the dilution of separation of powers, Mukherjee said.
போபால் நகரில் தேசிய நீதித்துறை அகாடமி வளாகத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுக்காக அமைக்கப்பட்ட மாளிகையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்திய அரசியல் சட்டம் அரசின் துறை ஒவ்வொன்றிக்கும் தனித்தனியாக வழங்கியுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப, அவைகளின் எல்லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மற்ற அரசியல் அமைப்புகளின் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது. நீதித்துறையின் செயல்பாடுகள், அரசியலமைப்பு வழங்கும் அதிகாரப்பகிர்வை நீர்த்துப்போக செய்யக்கூடாது. இந்திய அரசியலமைப்பில் நிர்வாகம், மக்களின் பிரதிநிதிகள் கொண்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் ஆகிய மூன்றிற்கும் இடையேயான சமநிலை அனைத்து சூழ்நிலைகளிலும் பராமரிக்கப்பட வேண்டும்.
 நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இங்கு பார்ப்பானுக்கும் பணக்காரனுக்கும் கிடைக்கிற நீதியே வேற வேற வேற...வேற .பக்கத்திலேயே  நிக்குதே தத்து... 
பொதுமக்களுக்கு நீதித்துறை அணுகக் கூடியதாகவும், விரைவானதாகவும், குறைந்த செலவு பிடிப்பதாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக நீதித்துறை அனைத்து விஷயங்களிலும் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக தமிழர்களின் பாரம்பரியம் பற்றி கவலைப்படாமல் ஜல்லிக்கட்டை உச்சநீதிமன்றம் தடை செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் நீதித்துறை அரசியலமைப்பை நீர்த்துப்போக செய்கிறது என்று ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: