31
வயதான மனு சனிக்கிழமை இரவு, வான வேடிக்கை போட்டியை காண புற்றிங்கல்
கோயிலுக்கு சென்ற போது, அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட விருக்கும் தீ
விபத்தை அவர் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.
கல்லம்பாலத்தை சேர்ந்த அவர் சனிக்கிழமை இரவு 11.30 மனியளவில் கோயிலை சென்றடைந்தார். கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம் பரவூர் அருகேயுள்ள புற்றிங்கல் அந்த கோயிலில் கொண்டாட்டங்கள் நடு இரவு துவங்கின. தொடர்ந்து அதிகாலை வரை நீடித்து கொண்டே இருந்தது. காலை 3.45 மணியளவில் கோயிலை சுற்றி கூட்டம் நிரம்பி வழிந்தது.
மனு கோயிலிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலிருந்தார்.
அப்போது திடீரென காதை பிளக்கும் அளவிலான அதிக சத்தம் உண்டாயிற்று.அதனை தொடர்ந்து ஒரு தீப்பந்தம் ஒன்று மனுவை நோக்கி வருவதை கவனித்தார்.உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்ற அவர் அருகிலிருந்த வீட்டை நோக்கி ஓடினார். ஆனால் அந்த தீப்பந்தம் அவரை தாக்கியதோடு அல்லாமல், அந்த வீட்டின் மேல்கூரையையும் தகர்த்தெறிந்தது. அந்த சம்பவம் வரை தான் கடைசியாக அவர் நினைவில் இருந்தது என கொல்லம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அவர் நியூஸ் மினிட்டிடம் கூறினார்.பின்னர் தான் அந்த சம்பவத்தில் தப்பியவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டதை அவர் அறிந்தார்.
அந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட வேறு சிலர், இறந்தவர்களின் எண்ணிக்கையும், காயம்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக குறைவு. இந்த சம்பவம் நடு இரவு நடந்திருக்காம் எனில் எண்ணற்றோர் பலியாகி இருக்க கூடும். பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு முன்னரே தங்கள் வீட்டு சென்றதால் அவர்கள் இந்த கோர விபத்திலிருந்து தப்பினர் என்கின்றனர். - See more at: .thenewsminute.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக