வெள்ளி, 15 ஏப்ரல், 2016

பிரியங்காவின் கணவர் வதேரா அரசியலுக்கு வரப்போகிறார்? மோடியே வந்துட்டார்ர் இனி எவர்ர்ர் வந்தா....

பிரியங்காவின் கணவரும், சோனியா காந்தியின் மருமகனுமான ராபர்ட் வதேரா, தனது அரசியல் ஈடுபாடு குறித்து பதிலளித்து உள்ளார்.
நில மோசடி வழக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் இவர் மீது, அரியானா மாநிலத்தில் நிலமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அரியானாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப். உடன் இணைந்து நில மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணைக்குழுவை தற்போதைய பா.ஜனதா அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு ராபர்ட் வதேரா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வலிமையான குடும்பம் என் வாழ்க்கையை மேம்படுத்த எனது மனைவியின் ஆதரவு தேவையில்லை. எனக்கு இப்போதும், எப்போதும் போதுமான வசதி வாய்ப்புகள் உள்ளன. எனக்கு போதுமானவற்றை எனது தந்தை அளித்துள்ளார். அனைத்து விதமான சூழல்களையும் எதிர்கொள்வதற்கு கற்றுக்கொண்டுள்ளேன்.
என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை பார்த்து நான் இந்தியாவை விட்டு ஓடிவிடமாட்டேன். நான் பிறந்ததும், வளர்ந்ததும் இங்கேதான். நான் அவமானப்படுத்தப்பட்டாலும் இங்கிருந்து வெளியேறமாட்டேன். எனக்கு மிக வலிமையான, நல்ல குடும்பம் உள்ளது. அது எனக்கு பலத்தை அளிக்கிறது.
அரசியல் ஈடுபாடு அரசியலில் ஈடுபடுவது குறித்து இப்போது எதையும் கூறமாட்டேன். எதிர்காலம் எனக்காக எதை வைத்திருக்கிறது என்பதை பிறகு பார்க்கலாம். என்னால் சிறிது மாற்றத்தை உருவாக்க முடியும் என நினைத்து மக்கள் என்னை அழைத்தால் மட்டுமே அரசியலில் ஈடுபடுவது குறித்து சிந்திப்பேன்.
என்னுடைய பொறுப்புகளை நான் உணர்ந்துள்ளேன். எத்தகைய குடும்பத்தில் நான் இணைந்திருக்கிறேன் என்பதும், கடந்த தலைமுறைகளுக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும். அதை நான் மதிக்கிறேன் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ராபர்ட் வதேரா கூறினார்.  dailaythanthi.com

கருத்துகள் இல்லை: