பாகிஸ்தானில் உள்ள உமெர்கோட் மாவட்டத்தில் 14 வயது
சிறுமியை கும்பல் வன்புணர்வு கொடுமை செய்த குற்றத்திற்கு தண்டனையாக 30
மாண்ட் அல்லது 1140 கிலோ கோதுமை கொடுக்க சொல்லி இசுலாமிய போதனைகளின்
அடிப்படையிலான ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது ‘ஜிர்கா’ எனும் பாகிஸ்தான் கப்
பஞ்சாயத்து. அதன்படி 1140 கிலோ கோதுமை அபராதமாக கொடுத்தால், ஒரு சிறுமியை
வன்புணரலாம் என்றாகிறது.
இந்த காட்டுமிரண்டித்தனமான தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாததால் அந்த சிறுமியின் வீட்டார் அந்த பகுதியை விட்டே வெளியேறக் கட்டாயப்படுத்தபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த பகுதி ஊடகங்கள் இதைச் செய்தியாக்கி பரபரபாக்கியவுடன் அந்த வழக்கை திரும்ப பெறச் சொல்லி மிரட்டுவதாக அந்த சிறுமியின் அண்ணன் கூறியுள்ளார். பாகிஸ்தான் எவ்வளவு அட்ட்டூழியம் செய்தாலும் அமேரிக்கா மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஏராளமான ராணுவ உதவிகள் செய்வது ஏன்
அந்த கொடுமை நடந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஜிர்கா பஞ்சாயத்துக்கள் நடப்பதாக தகவல் ஏதும் தெரியவில்லை என்று அந்த பகுதி காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். விசாரணை உடனே நடத்தப்பட்டு குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
SRPO என்ற அமைப்பின் தலைவரான சகிதா தேதோ (Zahida Detho) சிந்து மாநில அரசு இதற்கு ஒரு நீதித்துறை ஆணையம் அமைத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், ஆனால் பெற்றோர்கள் வழக்குகளை திரும்பப் பெற சொல்லிக் கட்டாயபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்றும் அதிகாரத்தில் இருக்கும் இந்த ஜிர்கா அமைப்பு என்பது கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் காப் பஞ்சாயத்து போன்றதாகும். இங்கே காப் பஞ்சாயத்துகளில், ஊரில் உள்ள ஆதிக்க சாதிகளை சேர்ந்த செல்வாக்கான பெருசுகள் மற்றும் ‘மைனர் குஞ்சுகள்’ நாட்டாமைகளாக இருப்பது போல ஜிர்கா அமைப்பிலும் செல்வாக்கான நபர்களே தலைவர்களாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். இசுலாமிய போதனைகளின் படி தீர்ப்பு வழங்குவதாகக் கூறிக் கொண்டே கடைந்தெடுத்த கழிசடைத்தனமான காட்டுமிராண்டித்தனமான தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துகின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் இந்த ஜிர்கா பஞ்சாயத்துகள் அந்த பகுதிகளில் நீதிமன்றங்கள் போலவே செயல்படுகின்றன. சில பகுதிகளில் எல்லைப்புற குற்றங்கள் கட்டுப்பாடு (FCR) இருந்தாலும் சட்ட ஒழுங்கை நிர்வகிக்கும் அதிகாரம் என்பது ஜிர்காவிடமே உள்ளது.
மத அடிப்படையிலான பாகிஸ்தானில் மேலோட்டமான சில ஜனநாயகச் சட்டங்கள் இருப்பதாக கூறிக் கொண்டாலும் நடைமுறையில் ஆதிக்கம் செய்வது என்னவவோ இந்த ஜிர்கா சட்டங்கள் தாம். பாகிஸ்தானில் இந்த ஜிர்கா பஞ்சாயத்துக்கள் அமைப்பு சட்டவிரோதமானது என்று பாகிஸ்தான் நீதிமன்றங்கள் கூறி இருந்தாலும் பெரும்பான்மையான கிராமபுறங்களில் இன்னும் இந்த அமைப்பின் அதிகாரம் தான் கொடிகட்டிப் பறக்கிறது.
இது ஒருவகையில் தீண்டாமை ஒரு பாவ செயல் மற்றும் தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய சட்டங்கள் கூறினாலும் தீண்டாமைக் கொடுமைகளின் கூடாரமாக இந்தியா உள்ளதை ஒப்பிடலாம். இந்த ஜிர்கா அமைப்பின் மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளை ஒப்பிட இந்தியாவின் காப் பஞ்சயத்துகளே அதிகம் தகுதியுள்ளன.
கடந்த ஆண்டில் உத்திரபிரதேசத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர், திருமணமான ஒரு ஆதிக்கசாதி பெண்ணோடு தொடர்பு வைத்து இருந்ததற்கு தண்டனையாக அவரது இரு தங்கைகளையும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யுமாறு காப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கி அதை நிறைவேற்றியதை வாசகர்கள் அறிந்து இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் பல்வேறு சமயங்களில் கௌரவ கொலைகளாகட்டும், மரண தண்டனையாகட்டும், ஊரை விட்டுத் தள்ளி வைப்பது போன்ற மனித தன்மையற்ற பலத் தீர்ப்புகளை இந்த காப் பஞ்சாயத்துகள் நடைமுறை படுத்தியுள்ளன.
கெடுத்தவனுக்கே பெண்ணை கல்யாணம் செய்து வைப்பது தான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்திய சமூகம் வழங்கும் மிக சிறந்த நீதியாக திரும்ப திரும்ப இங்கே சொல்லப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அது ஒரு கலாச்சார அடையாளமாகவே மாறி உள்ளது. அந்த கலாச்சார பின்னணியில் இங்கே எடுக்கப்பட்ட ‘நாட்டாமை’ போன்ற படங்கள் வர்த்தகரீதியில் மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை இங்கே நினைவு கூரலாம்.
பாகிஸ்தானில் இந்த ஜிர்காக்கள் இசுலாமிய முறைப்படி இயங்குகின்றன எனில் இந்தியாவில் காப் பஞ்சாயத்துக்கள் பார்பனியத்தின் சாதிமுறை அடிப்படையில் இயங்குகின்றன. இரண்டும் அடிப்படையில் ஒன்று தான். அதாவது இந்தியா தனது காட்டுமிராண்டித்தனத்திற்கும் முகமூடியாக தன்னை ஒரு ஜனநாயகவாதியாக வெளிகாட்டிக் கொள்கிறது. பாகிஸ்தானுக்கு அந்த முகமூடியே தேவைப்படவில்லை அவ்வளவுதான் வேறுபாடு.
மேலும் படிக்க வினவு.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக