புதன், 13 ஏப்ரல், 2016

அமித் ஷா : தேசத்திலேயே ஊழல் மிகுந்த ஆட்சி தமிழகத்தில்தான்

AIADMK most corrupt in India: Ahead of Tamil Nadu polls, Amit Shah mounts scathing attack on Jayalalithaa
தேசத்திலேயே ஊழல் மிகுந்த ஆட்சி தமிழகத்தில்தான் நடைபெறுகிறது: திருச்சியில் அமித்ஷா பேட்டி மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மத்திய அரசின் பல திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த முடியவில்லை என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் 234 தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள விமானம் மூலம் வந்த தேசிய தலைவர் அமித்ஷா, முதலில் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  ரொம்ப நன்றிங்க  இம்புட்டு நாளா எங்கே போயிருந்தீங்க? சீ சீ இந்த அதிமுக புளிக்கும் .....ஒன்று மட்டும் உண்மைங்க உங்களுக்கு தமழ்நாடு எப்பவுமே புளிக்கும்தான் என்றைக்குமே இங்கு உங்களுக்கு இனிக்காது...நடைய கட்டுங்க  


வருகின்ற தேர்தல் தமிழக மக்களுக்கு முக்கியமான தேர்தல். கடந்த தேர்தல்களில் யாரையும் தேர்தெடுக்க தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. மாறாக தங்களுக்கு பிடிக்காதவர்களை வெளியேற்றவே வாக்களித்து வந்தார்கள். ஆனால் இம்முறை மக்கள் யாரை தேர்தெடுக்க வேண்டும் என்ற வகையில் வாக்களிக்க வேண்டும். அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஊழலில் மூழ்கி திளைக்கும் கட்சிகள். திமுக தலைமை மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கும், அதிமுக தலைமை மீது சொத்து குவிப்பு வழக்கும், காங்கிரசை சேர்ந்த சிதம்பரம் மகன் மீது அமலாக்க பிரிவு வழக்கும் உள்ளது.

இவை எல்லாம் அக்கட்சிகள் ஆட்சியில் இருந்த போது செய்த ஊழலின் பரிமாணங்கள். தமிழ்நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏதாவது நடந்து இருந்தால் அதற்கு காரணம் ஏழை விவசாயியாகதான் இருப்பார். மத்திய மோடி அரசு பல்வேறு சாதனை திட்டங்களை தமிழக மக்களுக்கு கொண்டு வர பெரும் சிரமப்பட்டு வருகிறது. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் மத்திய அரசின் பல திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மும்முனை போட்டியினிடையே பாரதீய ஜனதா கட்சிக்கு 19.5 சதவீதம் வாக்கு கிடைத்தது. ஆனால் தற்போது 5 முனை போட்டி நிலவுகிறது. எனவே ஊழலுக்கு எதிரான ஆட்சி உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதிமுக - திமுக இரு கட்சி ஆட்சி காலத்தில் மணற்கொள்ளையர்கள், சாராய கொள்ளையர்களால் மக்களுக்கு மிகப்பெரிய தீமை ஏற்பட்டு உள்ளது. ஆனால் பிஜேபி மீது ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாது.

தேசத்திலேயே ஊழல் மிகுந்த ஆட்சி தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க பாஜகவை ஆதரவளிக்க வேண்டும் என்று பேசிய அவரிடம் பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, நாங்கள் தேசிய கட்சி, ஏதோ ஒரு கட்சி வெளியேறியதால் பிஜேபி பலவீனமாகி விடாது.

காவிரி பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே கருத்து ஒற்றுமை கொண்டு வருவது அவசியம். கருத்தொற்றுமை கொண்டு வர பாஜக அரசு முயற்சிக்கும். திமுகவும், அதிமுகவும் பலமுறை காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஆனால் காவிரி பிரச்சினையில் தீர்வு காண முயலவில்லை. எனவே எங்கள் மீது குற்றம் சாட்டி இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அதிமுக எங்களுடன்; கூட்டணி அமைக்காதது, எங்களுக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை. பாஜக பலத்தை நம்பியே தற்போது தேர்தலை சந்திக்க உள்ளோம். தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தற்போது துப்பாக்கி சூடு நடைபெறுவதில்லை. கைது படலமும் இல்லை. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுகின்னர். தற்போது இந்த மாற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. தமிழக தேர்தல் பிரச்சாரத்ததில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஈடுபடுவார். பிச்சாரத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார் nakkheeran.in

கருத்துகள் இல்லை: