ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் என்னாச்சு?
தமிழக வேளாண்மையில், மானாவாரி சாகுபடி பரப்பளவு ஏறக்குறைய, 40 சதவீதமாகும். மானாவாரி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அதிகரித்து வரும் வெப்ப நிலை உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க, அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நடப்பாண்டில் மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், பயிர்களின் உற்பத்தி திறனை உயர்த்தவும், கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்புடன் இணைந்த, ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம், 48.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். - ஆனால், திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில், உயரிய அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்றி, பயிர் சாகுபடியில், அதிக மகசூல் பெற்று வருகின்றனர். அதேபோல், தமிழக விவசாயிகளும், பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துவது, விளைபொருள் தரத்தினை உயர்த்துவது உள்ளிட்ட, பல்வேறு தொழில்நுட்பங்களை நன்கு அறிந்து செயல்படுத்தி, லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழகத்தில் உள்ள, 100 முன்னோடி விவசாயிகளுக்கு, தோட்டக்கலைப் பயிர்களில் நன்கு முன்னேறியுள்ள, வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.
இது மட்டுமல்லாமல், நமது நாட்டில் பிற மாநிலங்களில் பின்பற்றி வரும் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளவும், உள்நாட்டு கல்விச் சுற்றுலாவுக்கு, 10 ஆயிரம் விவசாயிகள் அழைத்து செல்லப்படுவர் என, முதல்வர் ஜெயலலிதா,சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
- அதன்படி விவசாயிகளை அழைத்து செல்ல,ஏற்பாடு நடந்தது. ஆனால், யாரையும் அழைத்து செல்லவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக