சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றியை துள்ளியமாக கணித்ததற்காக
கிடைத்த ரூ.10 லட்சம் அன்பளிப்பால் அவரது ஆஸ்தான ஜோதிடரான உன்னிகிருஷ்ண
பனிக்கர் வருமான வரி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனன்காடியைச் சேர்ந்தவர்
ஜோதிடர் உன்னிகிருஷ்ண பனிக்கர். முதல்வர் ஜெயலிலதாவின் ஆஸ்தான ஜோதிடர்.
கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆவார் என்று அவர் கணித்துக்
கூறினார். கிரிமினல் வழக்குள் நிலுவையில் இருந்ததால் ஜெயலலிதாவால் அப்போதைய
தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்றாலும் அதிமுக அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் ஆனார்.
அவர் முதல்வர் ஆவார் என்று துள்ளியமாக கணித்த பனிக்கருக்கு ரூ.10 லட்சம்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 2002-2003ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்குதலில்
பனிக்கர் தனது வருமானம் ரூ.2.67 லட்சம் என்றும், தனது தொழில் மூலம்
செலவுகள் போக ரூ.1.89 லட்சம் தான் கிடைத்துள்ளது என்றும்
தெரிவித்திருந்தார். மேலும் அன்பளிப்பாக கிடைத்த ரூ.10 லட்சத்திற்கு வரி
விலக்கு கோரியிருந்தார்.
ஆனால் அவர் அந்த அன்பளிப்பு பணத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்று
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை
எதிர்த்து பனிக்கர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது
மனுவை கடந்த மாதம் நிராகரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு அன்பளிபப்பாக
கிடைத்த பணம் அவரது தொழில் மூலம் கிடைத்ததால் வரி செலுத்த வேண்டும் என்று
உத்தரவிட்டது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக