புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க, வெளிநாட்டினருக்கு விசா
வழங்கும் முறையில் எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
சீனா, பாகிஸ்தான், ஈரான், இலங்கை உள்பட 8 நாடுகளை தவிர மற்ற 180
நாடுகளுக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தும் என மத்திய அமைச்சர் சுக்லா
தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த நாட்டின்
விசாவை தூதரகங்கள் வாயிலாக முன்கூட்டியே பெற வேண்டும். சில நாட்டவருக்கு
சில நாடுகள் விசா வழங்குவதில் சலுகை அளித்து வருகின்றன
இந்த நாட்டை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே விசா வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சலுகை உள்ள நாட்டின் விமான நிலையங்களிலேயே விசாவை பெற்றுக் கொள்ளலாம். இந்தியா வரும் பின்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விமான நிலையங்களிலேயே விசா வழங்கும் வசதி ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.
மற்ற நாட்டினர் அவரவர் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் விசா பெற்ற பின்னரே இந்தியா வர முடியும். இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து நாட்டினருக்கும் இந்தியாவிலேயே விசா வழங்கும் வசதியை செய்து தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சீனா, ஈரான், பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 நாடுகளை தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் இந்த வசதி செய்து தரப்படும். இதன்படி சுமார் 180 நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் பலன் பெறலாம். மேலும் இந்த 180 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆன்லைன் வழியாகவும் விசாவை பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, கொச்சின், ஐதராபாத், கோவா, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களில் இந்த வசதி முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் அக்டோபருக்கு முன்னதாக இந்த வசதிகள் அமலுக்கு வரும் என மத்திய திட்ட அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக